பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர், கா. கோவிந்தன் 55

இட்டிகளாற் செய்யப் பெற்று குத்தப்படாத் திண்மை யும், வளைந்து தான்ே எய்யும் எந்திர வில்லும், சேர்ந்தாரைக் கடிக்கும் கரிய விரல்களை யுடைய குரங்கும், கல்லுமிழ் கவணும், கல்லிடு கூடையும், கிடங்கு நீங்கி மதிபற்ற்றுவாரைக் .ே கா த் து வலிக்கும் தூண்டிலும், கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலியும், உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப் புள்ளும், கிடங்கிலேறின், மறியத் தள்ளும் இருப்புக்கபையும், கண்ணைக் கொத்தும் சிச்சிலி தயும், மதிற்றலை யேறினார் உடலைக் கோட்டாற் கிழிக்கும் பன்றியும், கதவுக்கு வரியாக உள்வாயிற்படியில் நிலத்திலே வீழ விடும் மரங்களும், கணைய மரமுமாகிய பொறிகளையுடைன் மயான் அணுகுதற்கு அருமையும் உடைய மதில்களையும், உட்கொண்ட பலவகை யுணவு களையும் உடைய அரண்களையும்,

ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்குமாறு செய்வதும், அறத்தையும், இன்பத்தையும் தருவதும், உடையாரின்மையால் தான்ே வந்துற்றதும், கலத்தினும், காலினும் வரும் பண்டங்கட்கு இறையா யதும், பகைவர்பால் திறையாகக் கொண்டதும் ஆகிய பொருளையும், -

யானை முதலாய நான்குறுப்பாலும் நிறைந்து போரின் கண் ஊறுபடுவதற்கு அஞ்சாததும், அழியுநர் புறக்கொடை அயில்வேலோச்சாத் தலைவகையுடையதும் ஆயபடையையும்,

அவையிடை ஆடகுலைந்தான்் ஒருவனுக்கு அப் பொழுதே அவன் கைசென்று அவ்விளிவரலைக் களையு மாறு போல, தனக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே