பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பொருள் உறுமுறை"

மதிக்கத்தக்க நாகரீகம் மிக்க நாட்டில், பொருள் நிலை எவ்வாறு கூறிடப் படுதல் வேண்டும்; ஒருவர் எவ்வளவு பொருள் பெறுதற்கு உரிமையுடையர்; அவர் அருகில் உள்ளார் எவ்வளவு பெறுதற்கு உரிமை யுடையர் என்பன போன்றவைகளை ஆராய்ந்து நேரிய முறையைக் கையாளுதல் வேண்டும்.

தற்கால உலக வாழ்வில், நம்மையறியாமலே பொருள்கள், மணிக்கு மணி,நிமிடத்திற்கு நிமிடம் கூறிடப் பட்டே வருகின்றன. உலகில் இறுதியாக இருவர் வாழும் வரையிலும் பங்கிடப்பட்டே நிற்கும். பொருள்கள் கூறிடப்படுகின்றனவா, இல்லையா என்பதில் கருத்து மாறுபாடில்லை; ஆனால், பொருள் எந்த முறையில், எந்த திட்டத்தின் கீழ்க் கூறிடப்படுதல் வேண்டும் என்பதில்தான்் கருத்து மாறுபாடு நிற்கின்றது.

பொருளைக் கூறிடும் முறையில், பலர் பல மாறுபட்ட கொள்கையினை யுடையராகக் காணப்படுகின்றனர். அவருள் ஒரு சாரார், ஒருவர் தன் தனிப்பட்ட உழைப்பின் பயனாக உலகிடை எவ்வளவு பொருள்களை யுண்டாக்கு கின்றாரோ, அவ்வளவு பொருள்களையும், அவர் தாமே அடைதல் முறையாகும் என்கின்றனர், -