பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 63.

வறியராகவும் இருத்தலை, அவர் அறியார்போலும். இன்னும் சிலர், பிறப்பானே செல்வராகவும், வறியராக வும். இருத்தலும் கண்கூடாம். அவர்கள் கூற்றுப்படி, அவரவர்தம் தகுதியறிந்தே பொருளைக் கூறிடுதற்கு முன்னரே, ஒரு குணமும் வாய்க்கப் பெறாத இளமைக் காலத்திலேயே அவர்கள் வறியராகவும், செல்வாராக வும் இருத்தற்கு இவர்கள் யாது கூறுவரோ அறியேம்.

இனி, ஒவ்வொருடைய தகுதியை அளந்தறிவதாவது கூடுமான செய்கையா, என்பதை நோக்குவாம். கொல்ல னுக்கும், மதகுருவுக்கும் உள்ள தகுதி வேறுபாட்டை எங்ங்ணம் அளந்தறிதல்கூடும். மதகுரு பலநூல்களைப் படித்திருக்கலாம். அதன் பயனாக, கொல்லனால் செய்” யப்பட மாட்டாத சொற்பொழிவுநிகழ்த்தலாம். ஆனால் கொல்லன் செய்யக்கூடிய, குதிரை லாடத்தையோ, அல்லது பிறவேறு சாமானையோ செய்ய இயலாது. அதேபோன்று, கொல்லனும் மதகுரு செய்யக் கூடியன வற்றைச் செய்ய இயலாதவனாகவே இருக்கின்றான். இந்நிலையில் நோக்கின், ஒருவர் தகுதியைக் கொண்டு பொருளைப் பங்கிடுதல் கூடாத காரியமாம். ஒரோவழி, அவர்தம் தகுதியை அளவிடுதல் கூடுமானதாயினும், ஒரு வனைவிட, மற்றொருவன் இவ்வளவு அதிகப்படியான தகுதி வாய்ந்தவன் என்றோ, இவ்வளவு குறைந்த தகுதி" வாய்ந்தவனென்றோ, திட்டமாகக்கூற இயலாதாகலின் இம்முறையும் பொருந்தாமையறிக.

3. வல்லன் மக:ள்ளவர்கள் வன்கண் மையுடன்பொருள் களைப் பெற்று வாழலாம் என்றமுறை,நாட்டில் அமைதி யையும், கட்டுப்பாட்டையும் அழிக்கும். நாட்டில் உள். ளார் அனைவரும் ஒத்த வன்மையும், ஒத்த சூழ்ச்சியும் உடையராய் இருப்பின் எல்லாரும் ஒப்ப நலமடைவர்.