பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 占mái

ஆனால் உலகில் குழந்தைகளும்,முதியோரும் திறமையற் றவர்களும் இருப்பதோடு, ஒத்த பலமும், ஒத்த ஆண்டும் ஒத்த உடல்நலமும் வாய்க்கப் பெற்ற ஒருசிலருள்ளும், பேராசையும், கொடுமைநிறை யுள்ளமும் உடையவரும், அவையில்லாருமாக மாறுபட்டவர்களும் இருத்தலின், அது கூடாத காரியமாம். வியாபாரிகள், பொருளை எவ்வளவு உயர்ந்த விலைக்கு விற்கத் தங்களால் இயலுமோ, அவ்வளவும் முயற்சிப்பர். விடுடையவர்கள், வீட்டில் குடிவாழும் மக்களின் நிலைமையையும் ஒராது, வீட்டின் மதிப்பிற்கு மேலும் வாடகை வாங்க முற்படுவர். 'இறுதியாக நோக்கின், இத்திட்டம் உருப்படாத தொன் றாகவே முடியும் என்பது முடியாயிற்று. -

4. ஒருசிலர் பொருட் பகுதியில், மிகப்பவவற்றைப் பெற்று நன்குவாழ, பலர், சில பொருள் பெற்று வாழ்த லாகிய முறையே இன்று நாட்டில் நிகழ்வதாகும், இதனால் பயனடைபவர்கள் நாட்டை ஆளவும், புதுப் புது சட்டங்களை இயற்றிப் பரிபாவிக்கவும், நாட்டு தன்மைக்காகப் படைகளைத் திரட்டி நடத்தவும், கல்வி, விஞ்ஞானம், கலை, இலக்கியம், சித்தாந்தம், சமையம், முதலாயினவைகளைப் பாதுகாக்கவும், சிறந்த மாடங் களை வகுக்கவும், புதுமுறையில் உடுத்தவும், சிறந்த முறையில் வாழ்க்கையை நடத்தவும்,போதிய கல்வியைப் பெறுவராயினர். அவ்வாறு செலவுக்கு மேலும், பொருள் கொடுப்பதால், முதல் எனக் கூறப்படும் அம்மிக்க பொரு ளால், பொருளை அதிகப்படியான அளவில் உண்டாக்கு வதற்குரிய சாதனங்களான, புகைவண்டித் தொடர் கு சுரங்கங்கள், வாணிப நிலையங்கள் முதலாயவைகளை உண்டாக்க முடிகிறது என்பர் ஒருசிலர்.

இலர் பலராகவும், உளர் சிலராகவும் அமைந்த இத் திட்டம், சில்தொகையினராட்சி (Oligarchy) எனப் பெயர்