பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காவிரி

நாட்டு மக்களால் தரப்பெறும் வரிப்பணத்தைப் பெற்று வேலை செய்யும் ஒரு சிலர்பால் விடப்பெறும்.

பொருள்நிலை சமமாகக் கூறிடப்படின், பொருள் எல்லாம் செலவழிக்கப்பட்டு, புகைவண்டித் தொடர் உண்டாக்குவதற்கும், சுரங்கங்கள் வெட்டுவதற்கும், தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதற்கும் பொருள் இன்றிப்போய்விடும் என்கின்றனர். இக்கூற்று உண்மை என்றாலும், நாட்டுக் குழந்தைகள் நன்கு வளர்ந்து வாழ்தற்கு வேண்டிய பால், கிடைப்பதற்குமுன் நீராவிப் பொறி செய்தல் அறிவற்றவன் செயலேயாகும். ஆகவே இம்முறையும் பயனற்றதென்பது தெளியப்பட்டது;

5. உலகில் எத்தனை வகையான தொழில் முறைகள் உளவோ, அத்தனை வகுப்பாக மக்களைப் பிரித்துது தொழிலிற்கேற்ப அவ்வவ்வகுப்புகளுக்கு வேறுபட்ட பங்கு முறைகளைத் தருதல்வேண்டும் என்பார் கூற்றுப் படி, குப்பை கூட்டுவோன், வீட்டு வேலைக்காரன், சமையல்காரன் முதலாயினார், மதகுரு, ஆசிரியன், இசை யாளன், முதலாயினாரைவிட குறைவான பொருளைப் பெறுதல்வேண்டும் என்பது,அவர் கருத்தாதல் பெற்றாம். கல்வி கற்று, அறிவுடையராய் அதனால் பெரியாராகி, பள்ளி ஆசிரியர், மதகுரு முதலானோர், கல்விகல்லா கீழ் மக்களாகிய ஏழைத் தொழிலாளிகளைக் காட்டினும் அதிகம் பெறுதல் முறையாகும் என்று அவர்கள் கருது கின்றார் போலும். பெருந்தன்மையின் அறிகுறியே பெறாத, கல்வி ஒரு சிறிதும் கல்லாத இயந்திர ஒட்டிகள், கல்வி கற்றவர்களைவிட மிக்க பொருளைப் பெறுவதை இன்று நாம் காண்கின்றோம்; பெருங்குடிப் பிறப்பும் பெருங்கல்வியும் வாய்க்கப்பெறாதார் பொருளுடைய ராகவும், ஞானாசிரியர்களும், புலவர்களும் பொருளற்ற வறியராகவும். இருப்பது கண்கூடாம்.