பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 67

ஒரு தொழிலாளி நன்குவாழ எவ்வளவு பொருள் செலவாகுமோ அதைவிட அதிகமானபொருள், வேறு ஒரு தொழிலாளிக்குச் செலவாகும் எனச் சிலர் நினைக் கலாம். அவ்வாறு நினைப்பார் உளராயின், அவர்களை அத்தகைய நினைப்பைக் கைவிடுமாறு நான் கேட்டுக் கொள்ளுகிறேன். ஒரு ஏழைத் தொழிலாளி நன்கு வாழ் வதற்கு எவ்வளவு உணவு உட்கொள்கின்றானோ, அதே உணவு அரசனையும் நன்குவாழச்செய்யும்; இன்னும் கூறு வோமேயானால், அரசன் உட்கொள்ளும் உணவினும் அதிகப்படியான உணவை யுட்கொள்ளும் தொழிலாளி களும் உளர் எனலாம். அரசனுடைய பங்கை இரண்டு மடங்காக்குவதனாலேயே, அவனால், இருமடங்கு உணவையுட்கொள்ள முடியாது. இருமடங்கு நீரை யுட் கொள்ள முடியாத; இருமடங்கு உறக்கம் மேற்கொள்ள முடியாத; இருமடங்கு பெரிய மாடியில் வாழமுடியாது: இரு மனைவிகளை மேற்கொள்ள முடியாது; இரு இல்லற வாழ்க்கையை நடத்தவும் முடியாது, ஆகவே இம்முறை எவ்வாறு நோக்கினும் அறிவொடுபடாத் திட்டமாகவே

யுள்ளது.

6. தற்சமயம், உலகம் தன்னிலையிலேயே இயங்கு மாறு விட்டு விடுதலாகிய முறை, எளிமையும், பாதுகாப் பும் உடையதாகத் தோன்றினும், அது மிகவும் அரியதும், முடியாததுமாகும். ஒருபொருளை எவ்வளவு பாதுகாப் புடன் வைத்திருப்பினும், அது தன்னிலையில் நில்லாது மாறுபட்டே நிற்கும். உண்மையைக் கூறுவோமாயின், பாதுகாப்பில் இருக்கும் பொழுதினும், அதை, அது தன் னிலையிலேயே விட்டுவிடும் பொழுது உண்டாகும் மாறு பாடு மிக விரைந்ததும், திடுக்கிடக்கூடியதுமாகும்.

ஒவ்வொருவன் செய்யும் தொழிலும் அவனுக்கே உரிமையுடையதாக நில்லாமையால் கடந்த நூற்றைழ்