பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() காவிரி

அம்முறையே யாகும் என்பது தெரியப்பட்டமையின், பொதுவுடைமையாளர் கூற்றினை நோக்குதற்குமுன் ஏழையென்பது பற்றிச் சிறிது கூறுவாம். -

வறுமையென்பது, தன்னை உற்றாரை என்றும் ஆறுதலற்ற நிலையிலேயே இருக்கச் செய்து, பேரிடர் விளைக்கும் இயல்புடைய ஒன்றாம் எனினும், அஃகு துற்றார், பசியும், பிணியும் நீக்கி, வாழப்பெறுவராயின் அவர்கள் என்றும் மன அமைதி என்பதே யிலராய் இருக் கும் பொருளுடையாரைப்போல் அல்லாழல், மன அமைதி யும் அதன் காரணமாக உள்ளக்களிப்பும் உடையவராகவே இருப்பர்; தம்முடைய இருபதாவது ஆண்டில் தாம் பெற்று வாழ்ந்த பொருள் அளவைக் காட்டினும், பன் மடங்கு மிக்கபொருளைத் தம்முடைய அறுபதாவது * ஆண்டில் பெற்று வாழ்வார் பலரைக் காண்கிறோம்; எனினும், அவருள் ஒருவராயினும், தம்முடைய இருப தாவது ஆண்டில் பெற்று வாழ்ந்த இன்ப வாழ்க்கையை விட தம்முடைய அறுபதாவது ஆண்டில் பன்மடங்கு மிக்க இன்ப வாழ்க்கையைப் பெற்று வாழ்வதாகக் கூறுகின்றா ரில்லை. உள்ளக்களிப்பின், உண்மை, இன்மைகள், ஒரு வற்கு இயற்கையே வாய்த்துள்ளனவே யொழிய அவ் வுண்மை, இன்மைகளுக்குப், பொருள் காரணமாகாது என்பதே அறிவுடையார் கொள்கை. ஒருவனுடைய பசிப்பிணியைப் போக்கலாம், ஆனால்.அவனுடைய மனச் சோர்வினைப் போக்குதல் இயலாது. - .

வறுமை வாழ்க்கையுடைய பெண் ஒருத்திக்குப், பெரிய வீடு, எண்ணற்ற வேலையாட்கள், வகை வகை யான வனப்புறு உடைகள், ஒப்பனை செய்யப்பெற்ற நீண்ட தலைமயிர் ஆகிய இவைகளைக் கொண்டு வாழும் வாழ்க்கை, மிகவும் இனிமையுடையதாகத் தோன்றலாம்