பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 71

ஆனால் அவையனைத்தையும் கொண்டு வாழும் வாழ்க் கையையுடையா ளொருத்தி, இவற்றின்பால் உள்ள விருப்பக் குறைவான், நாளின் மிக்ககாலப்பகுதியை இவற் றினின்றும் நீங்கி வெளியிடங்களில் வதிய விரும்புவதைக் காண்கின்றோம். தெளிந்த அறிவுடையாரைக்காட்டினும், குடிக்கும் இயல்புடையார் களித்த உள்ளமுடையராய் இருக்கின்றனர்; நல்லியல்புடையார் தாம்தொடங்கிய வேலை மடங்கலின்றி இனிது முடியுமளவும், இன்பமில ராகவே யிருத்தலைக் காண்கின்றோம்.

. இந்நெறி, வறுமையுற்றாரைப் போன்றே பொரு ளுடையாரும் மன அமைதியின்றி யிருத்தலின், அப்பொரு ளுடையார் தாமும் வறுமையுடையரே யாவர்; என்னை? *செல்வ மென்பது சிந்தையின் நிறைவே, அல்கா நல்குரவு அவாவெனப்படுமே" என்பவாகலின் ஆகவே வறுமை மக்களால் வெறுக்கப்படுதற்குக் காரண்ம், அது மக்களுக்கு மன அமைதியின்மையினைக் கொடுத்தலான் அன்று; மற் றென்னையோ காரணம் எனின்? அது, தன்னையுற்றா ரைப் பிறமக்களினும் இழிவுடையராக, கீழ்மக்களாக எண்ணச் செய்தலே யாம் என்க.

இதுகாலை, நம்மிடையே நிலவும் இவ்வறுமை, ஏழை மக்களை இழிவுபடுத்துவதோடு நில்லாது, அவர்களைச் சுற்றியுள்ளோரையும் இழிவுபடுத்துகின்றது.வறுமையான் உளவாம் பல விளைவுகளினின்றும் தப்புதல் பொருளுடை யானுக்கும் இயலாது. வறுமை காரணமாகப், பல்வேறு தொடர் நோய்கள் தோன்றுமாயின், பொருளுடை யானும் அந்நோய்வாய்ப் படுதல் கண்கூடாம், வறுமை காரணமாகச் கொலையுங் களவு ஆகிய கொடுஞ் செயல் கள் நாட்டிடையே தோன்றின், பொருளுடையார் அவற் மினுக்கஞ்சி, தம்மையும். தமரையும், தம்பொருளையும் காத்தற் பொருட்டு மிக்கபொருளைச் செலவிடுகின்றனர்