பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 79.

இயற்கை நிலையில் உள்ள சிறுவிரலுடையான், தந்திரமுடையனாயும், கூறும் பொருள் அரியவயினும், கேட்போர்க்கு எளிய முறையில், அப்பொருள் பசுமரத் தறைந்த ஆணிபோல் அவர்தம் உள்ளத்தில் பதியுமாறு: கூறும் ஆற்றலுடையனாயும் இருப்பன். அது மிக நீண்டு இருப்பின், நூற்பயிற்சி மிகுதியினைக்காட்டும். மிகக் குறுகி இருப்பவரின் விரல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது கபடமற்று, தங்கள் கொள்கைகளைக் கூறுவதும் அதன்படி நடப்பதும் ஆய இக்குணத்தை வெளியாக்கும்"

ஒழுங்காகவும், பல்மாகவும் இருந்து, மேல் இணைப்பு

பின் புறம் வளையாமல் இருக்கும் பெருவிரலுடையோர் பிடிவாத குணமுடையோர் ஆவர். இத்தகையார், சினந் துழி, எதையும் செய்வர். அடிக்கடி மறுப்புக்களில் தலை யிட்டு எண்ணிப் பார்த்தலையும் விட்டு, தமக்கு நேர்ந்த இன்னல்களைப் போக்கமாட்டாராய் இருப்பதுடன், சிற். சில சமயங்களில் மிகநெருக்கடியான நிலைகளை அடைந்து: தவிப்பதும் 2.ண்டு.

மற்று, ஒழுங்காகவும், பலமாகவும் இருந்து சிறிது பின்புறமாக வளையும் விரலுடையார், பிடிவாத குணம், இலராய் இருப்பர். அது அதிகமாக வளையின், ஆராயும் இயல்பின்மையினைக் காட்டும். மேல் இணைப்பு மிகச் சிறியதாய் இருப்பின், அது இச்சாசக்தியின் மிகுதி யினைக் காட்டும்.

சிறுத்து நீண்டு, மெலிந்து, கூரியதாய் Liar விரல் களுடன், பின்புறம் வில்போல் வளையும் பெரு விர லுடை யான், புனல் வழிப்படும் புணைபோல், மனம் சென்