பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காவிரி

பெற்ற செல்வம் "தாழ்வில்ாச் செல்வம்' எனவும், இந்நெறி பிறழப்பெற்ற செல்வம் "தாழ்வுடைச் செல்வம்” எனவும் பெயர்பெறும். இனி, பேரிடர்க் கிடையே செல்வத்தினை இயற்றியும்,ஈட்டியும், காத்தும் நிற்பது அச் செல்வத்தால் ஐம்புல இன்பங்களையும் ஆரத் துய்த்தற்கு ஏதுவாய நுகர் பொருள்களைப் பெறுதற்கே யாம். அவ்வாறன்றி மிகப் பெரிய அளவாய செல்வத் தைப் பெற்றிருந்தும் அவற்றைத் தாம் இன்பம் துய்த்தற். காய வழிகளில் செலவிடாமல் இருப்பராயின் அக் காலை அச்செல்வம் "தாழ்வுடைச் செல்வம்” எனப் பெயர் பெறும். ஆதலின், அவ்வாறு இன்றிச் செல்வத்தா லாய முழுப்பயனும் எய்த வாழ்வார் "தாழ்விலாச் செல்வ’ ராவர். மேலும், "செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்கு தல்” எனவும் 'தக்கவன் ஒருவன் வாழத் தன் கிளை வாழ்ந்தது' எனவும் கூறுதற்கேற்பச் செல்வத்தினைப் பெற்றார், பொருளற்ற தம் சுற்றத்தினரைப் பேணுதல் செய்யவும் கடமைப்பட்டவராவர். ஆகவே, சுற்றத் திற்குப் பயன்பட வாழ்வாருடைய செல்வம் "தாழ்விலாச் செல்வம்' எனவும், அவ்வாறு பயன்பட வாழாதாரின் செல்வம், "தாழ்வுடைச் செல்வம்' எனவும் பெயர். பெறும்; இனி, செல்வம் பெற்றார், தம் சுற்றத்தினைப் பேணுதலோடு நில்லாமல், தொடர்பிலராய பிற வறி யோர்க்கும் அவர் வேண்டும் பொருளைத் ஈந்து வாழக் கடமைப்பட்டவ ராவர். என்னை? "ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள், 231.) என்ப ஆகலின். ஆகவே, பிறர்க்குப் பயன்பட வாழ்வார்தம் செல்வமே “தாழ்விலாச் செல்வம்' எனப். பெயர் பெறும் என்பது தெளிவாம். "ஏதம் , பெருஞ். செல்வம் தான்் துவ்வான், தக்கார்க்கொன்று ஈதல் இயல்பு இலாதான்்” (குறள், 1006) என்ற குறளின் மேலே கூறிய பொருள் தொகுத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க.