பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்வர், கா. கோவிந்தன் - 87

ஆகவே, அறவழி நின்று பொருளிட்டித், தான்் துய்த்துச், சுற்றத்தினைப் பேணிப், பிறர்க்கும் ஈந்து வாழ்வார்பால் அடைந்த செல்வம் "தாழ்விலாச் செல்வம்' எனவும், இம்முறை பிறழ வாழ்வார்பால் அடைந்த செல்வம் தாழ்வுடைச் செல்வம்' எனவும் பெயர் பெறும் என்பது தெளிவாம். "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று" (குறள், 1000) என்பது வள்ளுவர் கூற்று,

வள்ளுவப் பெருந்தகையார் ஈண்டு, "தாழ்வில்ாச் செல்வர்” எனக் கூறவே, அந்நாட்டில் வாழும் செல்வர், அறவழியே பொருள் ஈட்டும் இயல்புடையார் என்பதும், பெற்ற செல்வத்தால் பேரின்பம் பெறும் இயல்புடையார் என்பதும், சுற்றத்தினைப் பேணியும், வறியோர்க் கீந்தும் வாழும் இயல்புடையார் என்பதும் பெற்றாம்.

சான்றோர் பலர் உண்மையால், மிக்க பெயல், பெயல் இன்மை முதலாய கேடு இலவாகவே மிக்குவிளை யும் விளைவும், தாழ்வினச் செல்வர் உளராகவே, பெரும் பொருளும் பெற்று இயல்வதோடு,பெரும் பொருளும் மிகு வளமும் உடையதாகவே, பிற நாடுகளிலிருந்து வருவார் தமக்கு வாழ்வளித்து, அவ்வாறு அளித்தது காரணமாகத் தன் கடமையாகிய இறைவர்க்கு இறையளிப்பதில் ஒரு சிறிதும்பிறழாது நின்று,நெடுங்கடல்தன் நீர்மையும் நன்கு நடைபெறுதற் கேதுவாய மழை நீரையும், பெருமழை உடைமையால் என்றும் நீர் அறாப் பேராறுகளையும், மழை வளம் கரத்தலின், ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் காலங்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் நீர் நிலைகளையும், உலகிடை உளவாம் விளைபொருள் அனைத்தும் தன் பால் விளைவதற்கேற்ற வெப்ப தட்ப நிலைகளைத் தருதற்குத் தகுதியாக உயர்ந்து விளங்கும்