பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும்

உலக வாழ்க்கை இரவும் பகலும் போன்று இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும், செய்யத்தக்க செயல் களும் செய்யத் தக்ாதனவாய செயல்களும் நிறையப் பெற்றது என்பதை யாவரும் ஒப்புக்கொள்ளுவர், அத்தகைய உலக வாழ்க்கையை மேற்கொண்ட மக்கள் பலரும், தாம் தாம் பெற்று நிற்கும் அறிவுநிலைக் கேற்ப, காட்சிவகையானும், கருத்து வகையானும் ஆய்ந்து ஆய்ந்து, இன்பமாவன இவை, துன்பமாவன இவை என வும், நன்மையாவன இவை, தீமையாவன இவை எனவும், தக்கன இன்ன, தகாதன இன்ன எனவும் வகுத்து வகுத்துக் கூறிச் செல்வராயினர். இவ்வாறு படைப்புக் காலம் தொடங்கி வாழ்ந்து வந்த மக்கள், தம் வாழ்க்கையில் கண்ட முடிபுகளைத் தம் பின்னுள்ளோர் எளிதில் உணர்ந்து உய்தற் பொருட்டு, தம் முன்னுள்ளோர் கண்ட முடிபுகளுடன் கூட்டித் தொகுத்துக் கூறிச் செல்வா ராயினர். இவ்வாறு கூறப்பட்ட நெறியே அறநெறியாம். சுருங்கக்கூறின், (முன்னோர் விதித்தனவற்றைச் செய்த லும், விலக்கியனவற்றைச் செய்யாமல் ஒழிதலும் ஆய இவ்விரண்டே அறநெறியாம்.) -

இவ்வறநெறி கடைப்பிடித்து வாழ்வான் துன்பத்தின் நீங்கிய இன்பத்தினையும், தீமையின் நீங்கிய நன்மை யினையும் பெற்று வாழ்பவனாகின்றான். அவ்வாறு