பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நகைப்பும் நாணமும் இருவேறு துருவங்கள். நகைக்கும் இடத்தில் நாணத்திற்கும், நாணம் உள்ளபோது நகைப்பிற் கும் இடம் இல்லை. சிரிப்பதா - அழுவதா என்று தெரிய வில்லை என்று சொல்கிறார்களே அதுதான் இது. இங்கே, 'நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் - அழுது கொண்டே சிரிக்கின்றேன்' என்னும் திரைப்படப் பாடலை ஒத்திட்டு நோக்கின் நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்? இங்கேயும் கம்பரின் திறமை பளிச்சிடுகின்றது. வாலியின் வருத்தம் வாலி இந்த நிலைமை நேர்ந்ததற்காக வெட்கப்படு கிறான்; தலையை அப்படியும் இப்படியும் சாய்க்கிறான்; மீண்டும் வெடி போன்ற ஏளனச் சிரிப்பு சிரிக்கிறான்; இதுவும் ஓர் அறம் போலும் என்று எதிர்மறையாய் எண்ணுகின்றான். உள்ளே அழுந்தும் குழியில், வலிமையும் மதமும் மிக்க யானை விலங்கோடு அகப்பட்டுக் கிடந்தாற் போல் துயருடன் கீழே கிடக்கின்றான்: - 'வெள்கிட மகுடம் சாய்க்கும் வெடிபடச் சிரிக்கும் மீட்டும் உள்கிடும் இதுவுந்தான் ஓர் ஓங்கறமோ என்றுன்னும் முள்கிடும் குழியில் புக்க மூரி வெங்களிகல் யானை தொள்கொடும் கிடந்த தென்னத் துயர் உழந்து அழிந்து சோர்வான்” (82) முள்குதல் = உள்ளே அழுந்துதல். மூரி = வலிமை. தொள்கு = வலை அல்லது விலங்கு. யானை மிக்கவலிமை உடையதுதான்; ஆனால், அதைப் பிடிப்பதற்காக வெட்டப் பட்டுள்ள சேற்றுக் குழியில் அகப்பட்டுக் கொள்ளின் என்ன செய்ய இயலும்? அதேபோல, வலிமையனாகிய வாலி தன்னைக் கொல்லக் குறித்த சூழ்ச்சியில் அகப்பட்டுக்