பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர் சண்முகனார் 97 கொண்டு, எழ முடியாமல், குருதிச் சேற்றில் கிடந்த வண்ணம் வருந்துகிறான். தக்க உவமை இது. பரதன் முன் பிரியா உயிருடன் வாலி வருந்திக் கொண்டிருந்தபோது, அவன் முன் இராமன் தோன்றினான். வாலி அவனை நோக்கி வையாது வைது புலம்புகின்றான். வாய்மையையும் குலமரபையும் காத்து உண்மைக்காக உயிர் துறந்த வள்ளலும் தூயவனுமாகிய தசரதனுக்குப் பிறந்தவனே! கிடைத்த அரசை ஏற்றுக்கொள்ளாத பண்பாளனாகிய பரதனுக்கு முன் பிறந்தவனே! இதுவரை யும் தாய்மையும் நட்பும் அறமும் காத்து ஒழுகியவனே! பிறரைத் தீங்கு செய்யாதபடி நடத்தித் தான் மட்டும் தீங்கு செய்யலாமோ. ' வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றி னாயே தீமைதான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன் றாமோ தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய்” (85) கைகேயிக்குக் கொடுத்த வாக்கு தவறாமல் - வரம் தவறாமல் - வாய்மை தவறாமல் - தம் குலப்பெருமை தவறாமல் நடந்து கொண்ட தூய வள்ளல் தசரதனாவான். இங்கே உள்ள 'வாய்மை காத்த தூயவன்' என்பது, "புறம்துாய்மை நீரான் அமையும் அகம்துாய்மை வாய்மையால் காணப் படும்' (298) என்னும் குறளை நினைவு செய்கிறது. வாய்மை காக்க உயிரையே துறந்ததால் தயரதன் வள்ளல் எனப்