பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கிட்கிந்தா காண்டத் திpຄrrບໍ່ຄ பாராட்டப் பெற்றான். அத்தகைய தூய வள்ளலுக்கு மகனாகத் தோன்றிய இராமனே! அத்தகைய உயரிய பண்பு உனக்கு எங்கே போயிற்று? என்கிறான் வாலி. மேலும், தவறான முறையில் தாய் தனக்குக் கிடைக்கச் செய்த அரசைத் துச்சமென உதறித்தள்ளிய பரதனுக்கு முன்னே நீ ஏன் பிறந்தாய்? இந்த இழிசெயலைச் செய்யத்தான் பிறந்தாயா? - என்று கேட்காமல் கேட்கிறான் வாலி. குகன் பரதனைப் புகழ்ந்த - 'ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா' என்னும் பகுதி ஈண்டு எண்ணத்தக்கது. மற்றும், தாயன்பும் நட்பும் அறஉணர்வும் பிறரிடம் கொண்டிருந்த உனக்கு இப்போது அவை எங்கே போயின? யாரும் தீமை செய்யாவண்ணம் இதுவரையும் காத்து வந்தாய் - இப்போது நீ-மட்டும் தீமை செய்யலாமோ? ஊருக்கு உபதேசம் செய்தால் போதுமா? தானும் அவ்வாறு நடக்க வேண்டியதில்லையா? - என்னும் பொருள்பட வாலி இராமனை வையாமல் வைதான். மேலும் சொல் கண்ை தொடுக்கிறான் ೧T6ಠಿ: ೭T குலம் என்ன - கல்வி என்ன - கொற்றம் என்ன . நலம் என்ன - நாயகம் என்ன வலம் என்ன - வண்மை என்ன . திண்மை என்ன - இவற்றால் எல்லாம் சிறந்தவனாகிய நி, அறிந்தும் அறியாதார் போல் இக் கொடுஞ் செயலைப் புரியலாமா? • . . - "குலம்இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்றுகின்ற நலம்.இது புவனம் மூன்றின் நாயகம் உன்ன தன்றோ