பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 99 வலம்இது இவ்வுலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை அலமரச் செய்ய லாமோ அறிந்திருந்து அயர்ந்து ளார்போல்” (86) எல்லாம் தெரிந்திருந்தும், இது தீமை என்று அறிந்திருந்தும் அறியாதவர் போல வேண்டுமென்றே இராமன் இப்பழிச் செயலைச் செய்ததாக வாலி குறிப்பிட்டுள்ளான். ஒன்றிலா? - இரண்டிலா? - பலவற்றிலும் தகுதியுடையவனாகிய இராமன் இவ்வாறு செய்யலாமா? - என்பது கருத்து. உண்மை வெளிப்பாடு மேலும் உரைக்கிறான்: ஒவியத்திலும் எழுதவியலாத அவ்வளவு மிக்க அழகுடையவனே! அரச அறநெறி உங்கள் குலத்தினர்க்கெல்லாம் உடைமை யல்லவா? அங்ஙனம் இருக்க, நீ மட்டும் அறநெறி பிறழலாமோ? உன் உயிர்க்கு உயிரானவளும் அன்னமும் அமிழ்தும் போன்றவளுமாகிய சானகியைப் பிரிந்தபின், நீ திகைத்து மயங்கிவிட்டாயோ? கோவியல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட் கெல்லாம் ஒவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை யன்றோ ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் . . திகைத்தனை போலும் செய்கை' (87) ஒவியத்தில் எழுத முடியாத அழகன் என்றது, ஆள் அழகாயிருந்தால் போதுமா? - அறஉணர்வு வேண்டாவா? - என்று தாக்கியதாகப் பொருள்படும். அரசகுலத்தார்க்கு நாடு - நகரம் - கோட்டை கொத்தளம் - பொன் மணி முதலான செல்வப் பொருள்கள் முதலியன உண்மையான