பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - கிட்கிந்தா காண்டத் திறனாய்வு உடைமைப் பொருள் ஆகா, அறமே உண்மையான உடைமை. அந்த அறத்தை நீ தவற விடலாமா என்று சாடியதான கருத்து இப்பாடலால் புலப்படுகிறது. மனைவியைப் பிரிந்த மயக்கத்தில் இவ்வாறு செய்து விட்டாய் - பெண்டாட்டி தாசன் போலும் நீ! மனைவியை இழப்பினும் அறநெறியை இழக்கலாமா என்று குத்திக் காட்டுவதான பொருளும் இதில் இருக்கிறது. மனைவியைப் பிரிந்ததனாலேயே இராமன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என்பதே உண்மை. அந்த உண்மை வெளிப்பாடே இந்தப் பாடலின் முடிந்த பொருளாகும். யாருக்காக யார்? அரக்கர்கள் தேவர்கட்கும் முனிவர்கட்கும் தொல்லை தந்தனர். அவர்களை அடக்குவதற்காக வந்தவன் நீ. அந்த அரக்கரை அழிப்பதை விட்டு, குரங்கினத்தின் அரசனை அழிப்பதுதான் அறம் என உங்கள் மனுநீதி நெறி உரைக்கின்றதா? அவர்கள் செய்த தீமைக்கு நாங்கள் என்ன செய்வோம்? இரக்கமே உனக்கு இல்லையா? நான் உனக்குச் செய்த பிழையாக என்னிடம் நீ என்ன கண்டாய்? இகழுக்கு உரிய பெரும் பழியை நீயே செய்தால், பிறகு புகழுக்கு உரிய சிறந்த செயலைச் செய்பவர் யார்? - என்றும் வினவினான் வாலி: "அரக்கர் ஓர்அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறோர். குரக்கினத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற் றுண்டோ இரக்கம்.எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா! பரக்கழி இது பூண்டால் - புகழையார் பரிக்கற் பாலார்?' (88)