பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 10 | குரக்கு = குரங்கு. உகுத்தல் = கவிழ்த்துக் கொட்டுதல். இரக்கம் முழுவதும் இராமன் துறந்துவிட்டதாகக் கூறுகிறான். பரக்கழி = பழிச் செயல். பழியையே நீ இப்போது அணிகலனாகக் கொண்டிருக்கிறாய் என்னும் கருத்தில் பரக்கழி பூண்டாய் எனப் பூண் என்னும் வேர்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் பயிரைக் காப்பவர் யார் - என்பதுபோல, நீயே பழிச்செயல் புரிந்தால் புகழ்ச்செயல் செய்பவர் வேறு யார்? பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பதுபோல, பழிக்கு உரியவராக அரக்கர் இருக்க, அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத யாங்கள் பாவத்தின் பயனைத் துய்க்கவேண்டுமா? என்னும் கருத்துகள் உள்ளுறையாகத் தெரிகின்றன. "அகமுடையான் அடிக்க, கொழுந்தனைக் கடிந்தாளாம்' 'தென்னைமரத்தில் தேள்கொட்ட, பனைமரத்தில் நெறி கட்டினாற்போல்’’ என்னும் பழமொழிகள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. வாலி இராமனை அப்பா என்று சுட்டியிருப்பது, குத்தலாய்ப் பேசுவதாகும். கலி காலம் மேலும் வாலி பேசுகிறான்: உலகில் குரங்கினத்துக்கு மட்டும் இப்போதே கலிகாலம் வந்துவிட்டதோ? மெலியவர்களிடத்தில்தான் ஒழுக்கமும் மேன்மையும் இருக்க வேண்டும் போலும் வலியவர் மெலியவரை வருத்தினால், அவ்வலியவர்க்கு வசை வராமல் புகழ் உண்டாகுமோ! "ஒலிகடல் உலகம் தன்னில் ஊர்தரு குரங்கின் மாடே கலியது காலம் வந்து பரந்ததோ கருணை வள்ளால்! மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும்? வலியவர் மெலிவு செய்தால் புகழ்அன்றி வசை இன்றாமோ?” (89)