பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஊர்தரு குரங்கு = மலையிலும் மரத்திலும் தாவி ஊரும் குரங்கு, மாடு - ஏழாம் வேற்றுமை உருபு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு என்பர். கிருத யுகத்தினும் திரேதா யுகத்திலும், திரேதா யுகத்தினும் துவாபர யுகத்திலும், துவாபர யுகத்தினும் கலியுகத்திலும் தீமைகள் பெருகுமாம். இராமாயண காலம் திரேதா யுகமாம். இப்போது இராமன் வாலியைக் கொன்றது மிகவும் முறையற்ற கொடுமை யாதலின், குரங்கினத்திற்காக இந்தத் திரேதா யுகத்திலேயே கலிகாலம் வந்துவிட்டதோ? என்று வினவுகிறான். நாம் இப்போது வாழ்கின்ற உலகில், கொடிய படைக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு உலகை அழிப்பதால் இது கலியுகம் எனல் சாலப் பொருந்தும். வாலி இராமனைக் கருணை வள்ளால் என விளித் திருப்பது புகழ்வதுபோல் பழிக்கும் வஞ்சப் புகழ்ச்சியாகும். துன்பம் செய்தவனை நோக்கி அட புண்ணியவானே’ என்று சாடுவது போன்றது. இது. மற்றும், மெலியவர்களாகிய எங்களிடந்தான் ஒழுக்கமும் விழுப்பமும் இருக்கவேண்டும் போலும் வலியவர்களாகிய உங்களிடம் அவை தேவை இல்லை போலும் வலியவர்களாகிய நீங்கள் மெலியவர் களாகிய எங்களை வருத்துவதால் உங்கட்குப் பழி இல்லாமல் புகழே கிடைக்கும் போலும் என்றெல்லாம் குத்தலாகப் பேசு கின்றான். இது ஒருவகையான கிண்டல் பேச்சு. நாட்டிலும் காட்டிலும் கூட்டுப்படை தேவையின்றித் தனியாகவே பொருது வெல்லக் கூடியவனே! நீ நாட்டிலும் காட்டிலும் ஒத்த செயல் செய்துள்ளாய். அதாவது அண்ணனது ஆட்சியைத் தம்பிக்கு உரிமையாக்குவதுதான் அது. நாட்டிலே தமையனாகிய நினது ஆட்சியை உன் தம்பி பரதனுக்குத் தந்தாய்.காட்டிலே எனில், தமையனாகிய எனது அரசை என் தம்பி