பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 103 சுக்கிரீவனுக்குக் கொடுத்துக்கொண் டிருக்கிறாய். ஆகா! இதற்குமேல் அரிய செயல் வேறு உண்டோ? "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ பெற்ற தாதை பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து நாட்டொரு கருமம் செய்தாய் எம்பிக்கு இவ்வரசை கல்கிக் காட்டொரு கருமம் செய்தாய் கருமந்தான் இதன்மேல் உண்டோ? (90) இது ஒரு சுவையான கருத்து வெளிப்பாடு. நாட்டை விட்டு வந்தாயே-வாளா இருந்தாயா என்ன? இங்கேயும் உன் வேலையைக் காட்டி விட்டாயே என்ற குறிப்பு இதில் உள்ளது. கருமந்தான் இதன்மேல் உண்டோ என்பதும் ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகும். கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றம் என்பது புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள "துணை வேண்டாச் செருவென்றி’ (16:10) என்பதே. இயங்கு படை அரவம் எனத் தொடங்கும் தொல்காப்பியப் புறத்திணையியல் (8) நூற்பாவின் உரையில், நச்சினார்க்கினியர், 'துணை வேண்டாச் செருவென்றி நாடக வழக்கு; துணை வேண்டுதல் உலகியல் வழக்கு’ என்று குறிப்பிட்டுள்ளவை ஈண்டு ஆய்வுக்கு உரியது. கம்பர் பாடலில் உள்ள கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றம்' என்பது நாடக வழக்கே. உலகியல் வழக்கு அன்று. ஏனெனில், இராமன் வானரப் படைகளைக் கூட்டாகக் கொண்டு சென்றே இராவணனை வென்றான். கம்பரின் நூல் ஒரு வகை நாடகக் காப்பியம் ஆதலின் இது ஒரு வகையில் பொருத்தமானதே. இராமன் அயோத்தியில் இருந்தால் கூட்டு வேண்டாமல் தம் படைகளைக் கொண்டே