பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு போர் புரியவும் கூடும். ஆனால், வெளியூருக்கு வந்து விட்டதாலும், தனக்கு வேறு படையே இல்லை யாதலாலும் வானரப் படைகளின் கூட்டு தேவைப்பட்டது. அங்ஙனம் இருந்தும், கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ' என்று வாலி விளித்ததாகக் கம்பர் பாடியுள்ளதின் உட் பொருள், நீ கூட்டு வேண்டாத கொற்றவனாயிருந்தும், வானரப் படையின் கூட்டு வேண்டி, முறையற்ற வகையில் என்னை அழித்து விட்டாயே என்று வாலி கூறுவதாக இருக்கும். கூட்டு வேண்டாக் கொற்றவன் என்பதுதான் வடமொழியில் அசகாய சூரன்’ எனப்படுகிறது. சூரன் = வீரன். சகாய சூரன் = உதவியோடு (சகாயத்தோடு) கூடிய வீரன். அசகாய சூரன் = உதவி வேண்டாத (சகாயம் வேண்டாத வீரன். துணை வேண்டாச் செரு வென்றியை” அசகாய சூரத்தனம் என்று முதுபெரும்புலவர் க. வெள்ளை வாரணனார் குறிப்பிட்டுள்ளார். இராவணன் செய்தது சரியே தொன்மையான நல்ல நூல்களையெல்லாம் கற்றறிந் தவனே! வலிமையுடையவர்கள் தங்கள் திறமையால் பிறரை அழித்து வெற்றி பெறல் ஆண்மையுள்ள அரசியல் முறையே என்றால், நீ இப்போது செய்திருப்பதும் அதுதானோ? அங்ங்னமெனில், இராவணன் தனது வலிமை யால் சீதையை எடுத்துக் கொண்டு போனதும் பொருத்தம் தானே. அவன் முறையற்ற செயல் புரிந்தான் என அவன் மேல் சினம் கொள்ளலாமா? நீயோ, இயற்கையாகவே முனிவு கொள்ளாதவன்: 'அறைகழல் அலங்கல் வீர ராயவர் புரிவது ஆண்மைத் துறையெனல் ஆயிற் றன்றே தொன்மையின் நன்னூற் கெல்லாம்