பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 105 இறைவன் என்னைச் செய்த தீதெனில் இலங்கை வேந்தன் முறையல செய்தான் என்று முனிதியோ முனிவிலா தாய்” (91) வாலி பெரிய வழக்குரைஞனாய் இருப்பான் போலும்! நன்றாக வாதம் புரிகிறான். அடாதன செய்து அகப் பட்டதைச் சுருட்டிக் கொள்வது அரசியல் முறைதான் என்ற முறையில் நீ என்னை அழித்தது தீ தில்லையெனில், இராவணன் சீதையைக் கொண்டு சென்றதும் தீயதில்லைஎன்று வாதாடுகிறான் வாலி. இயற்கையாகவே முனிவு இல்லாதவன் நீ ஆதலால் கைகேயி போன்றோர் மீது முனிவு கொள்ளவில்லை. இப்போது இராவணன் மீதும் என் மீதும் முனிவு கொண்டு என்னை அழித்தது முறையா? தொன்று தொட்டு வந்த நல்ல நூல்களையெல்லாம் கற்றது இதற்குத்தானா? கற்கக் கூடியனவற்றைக் கசடறக் கற்றுப் பின் அதன்படி நின்றொழுக வேண்டும் அல்லவா? ஏட்டுச் சுரைக்காய் கல்வி எதற்கு?- என்பன போன்ற கருத்துகள் எல்லாம் இப்பாடலில் பொதிந்து கிடக்கின்றன. அப்பன் மகன் அப்பனைப் போல் நடந்து கொள்கின்ற மகனைக் குறித்து, அவனா-அவன் அப்பன் மகன் ஆயிற்றே அவன்’ என்று கூறும் ஒரு வழக்காறு உலகியலில் உண்டு. இராமனும் தன் தந்தையைப் போல் ஒரு வகையில் நடந்து கொண்டானாம். தம் அகவை முதிர்ந்து கண்களையும் இழந்து விட்ட பெற்றோர்கட்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்ற சிறுவன் தடாகத்தில் நீள் மொள்ளும் ஒலியை, நன்றாக ஆராயாமல்-யானை நீர் அருந்துவதாகத் தவறாக மதிப்பிட்டு அச்சிறுவன் மேல் மறைவான நிலையில் இருந்து கொண்டு அம்பு எய்த உன் அப்பனைப் போலவே, நீயும் நன்கு ஆராயாமல் என்னைத் தவறாக மதிப்பிட்டு அழித்து