பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பரின் காலம் கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் எனச் சிலரும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சிலரும் கூறு கின்றனர். எனது கொள்கை இரண்டாவதேயாகும். (இது குறித்து, எனது அம்பிகாபதி காதல் காப்பியம் என்னும் காப்பிய நூலின் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளேன்). எனது கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்னும் இந்த நூலுக்கும் அன்பர்களின் ஆதரவையும் வாழ்த்தினையும் வணங்கி வேண்டுகிறேன். - இந்த நூலை நன்முறையில் வெளியிட்ட புத்தக வித்தகர் உயர்திரு வானதி ஏ. திருநாவுக்கரசு அவர்கட்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். மற்றும், நன்முறையில் அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியது. எல்லாவற்றிற்கும் அப்பால், யான் கம்பராமாயண விளக்கம் எழுதத் தூண்டிய புதுவைப் புலவர் உயர்திரு அ. அருணகிரி அவர்கட்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன். சுந்தர சண்முகன்