பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு விட்டாய் என்று வாலி கூறியதாக ஒரு பாடல் உள்ளது. அது: - "ஒன்றாக கின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான்செய்த தோர்குற்றம் இல்லை வென்றாள்வதே யென்னில் வேறொன்றும் இல்லை வீணே பிடித்தென்றன் மேலம்பு விட்டாய் தன்தாதை மாதாவுடன் கூடி உன்னைத் தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் கின்தாதை என்றேயும் நீயும் பிடித்தாய் நெறிபட்ட வாறின்று நேர்பட்ட தாமே" உன்னோடு எனக்குப் பகை இல்லை; நான் உலகிற்குச் செய்த தீமையும் இல்லை. உன் தந்தையைப் போல் நீயும் தவறு செய்து விட்டாயே என்று வாலி வைகிறான். இந்தப் பாடல் பல ஏட்டுச் சுவடிகளில் இல்லை. இது மிகைப் பாடலாகக் கருதப்படுகிறது. ஆனால் இதில் கூறப்பட்டுள்ள வாதம் நன்றாய்-சுவையாய் உள்ளது. கம்பன் பாடல்களில் எத்தனையோ அழிந்திருக்கலாம்; எத்தனையோ புதியனவாய்ப் புகுந்திருக்கலாம். இருமையும் ஒருமையும் இராமா! நீ ஆளப் போகும் இவ்வுலகில் நான் இருந்தால் என் உடல் ஒரு சுமையாகுமா? "என்னுடல் பாரம் அன்று”. அறம் காக்கும் உயர்ந்தோர் என்பவர், ஒரு பக்கம் மட்டும் சாயாமல், இரண்டு பக்கங்களிலும் உள்ள நன்மை தீமை களை (நியாயம்-அநியாயங்களை) நடுவு நிலைமையுடன் ஆய்ந்து முடிவெடுப்பதே அறமாகும். இருமை நோக்கி கின்று யாவர்க்கும் ஒக்கின்ற அருமை ஆற்ற லன்றோ அறம் காக்கின்ற பெருமை என்பது இதுஎன்? பிழைபேணல் விட்டு ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ' (94)