பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 107 ஒருமையை மட்டும் நோக்காமல் இருமையையும் நோக்கின், வாலி குற்றம் அற்றவன் என்ற தீர்ப்பும் கிடைக்கலாம். பகையை வெல்லத் துணையாகச் சிங்கத்தைப் பெறாமல் முயலைத் துணையாகக் கொண்டது என்ன முயற்சித் திறமையோ? "புயலைப் பற்றும்ஒர் பொங்கு அரிபோக்கி ஓர் முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ' (95) முகில் மண்டலம் வரையும் தாவக் கூடிய சிங்கத்தை விட்டது என்பது, வாலியின் துணையை நாடாதது. முயலை நாடியது என்பது சுக்கிரீவனின் துணையைத் தேர்ந் தெடுத்தது. இராவணனை வெல்லவேண்டுமெனில், அவனை என் வாலால் சுருட்டி இழுத்து வந்த என் துணையை நாடியிருந்தால் எளிதில் நின் நோக்கம் நிறைவேறியிருக்குமேஎன்னும் பொருளில் இந்த நயமான உவமை அமைந்துள்ளது. ஞாயிறு களங்கம் திங்கள், ஞாயிறு என்னும் இரு சுடர்களுள் திங்களின் நடுவே களங்கம் உள்ளது - அதுபோல் ஞாயிற்றுக்கு இல்லையே என்று எண்ணி, ஞாயிறில் களங்கம் உண்டாக்க முடியாதெனினும் ஞாயிறு குலத்தினராகிய உங்கள் குலத்திற்காவது களங்கம் ஏற்படுத்தி ஈடு செய்ய எண்ணி இந்த இழி செயலைச் செய்தாய் போலும்! - என்றான் வாலி: கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று ஊரியன்ற மதிக்கு உளதாம் எனச் சூரியன் மரபிற்குமோர் தொன்மறு ஆரியன்பிறந் தாக்கினை யாமரோ (96) கார்=கருமை. ஆரியன் = இராமன். திங்களின் நடுவில் உள்ள பள்ளம் படுகுழிகள் கருப்பாய்த் தெரிவதைக் களங்கம்