பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்றனர் அக்காலத்தார். ஞாயிற்றின் நடுவிலும் கரும் புள்ளிகள் உண்டு. அவை நம் கண்ணுக்குத் தோற்றா. வாலியும் வேலியும் விறல் வீரனே! நூல்களில் கூறப்பட்டுள்ள அறநெறி களையும் உன் முன்னோர் கடைப்பிடித்து வந்த அரசியல் முறை நெறியையும் உயரிய ஒழுக்கத்தையும் போற்றாத நீ, வாலியைக் கொல்லவில்லை - நல்லறத்தின் வேலியையே கொன்றுவிட்டாய்: 'நூல் இயற்கையும் நும்குலத்து உங்தையர் போல் இயற்கையும் சீலமும் போற்றலை வாலியைப் படுத்தா யல்லை மன்அற வேலியைப் படுத்தாய் விறல் வீரனே' (98) சீலம் - நல்லொழுக்கம். மன்அறம் = அரச தருமம். விறல் = வெற்றி, வீரனுக்கு இது அழகா என இடித்துக் காட்டும் பொருளில் விறல் வீரனே என வாலி விளித்தான். 'வாலியைப் படுத்தாயல்லை-வேலியைப் படுத்தாய்’ என்பது நயமான கருத்து வெளிப்பாடு. அறம் என்னும் பயிரைக் காக்கும் வேலி, நூல் இயற்கை, உந்தையர் இயற்கை, சீலம் என்பனவாம். வேலியே பயிரை மேய்ந்தாற் போல்கூட அன்று இது. வேலி இருந்தால்தான் அல்லவா பயிரைக் காக்கும்? வேலியையே அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டு கிறான் வாலி. ஒருவன் இருக்க ஒருவன் மேல் உன் மனைவியைக் கவர்ந்த ஒருவன் உள்ளான்; அவன் மேல் அம்பு எய்தலே வீரம். அதைவிட்டு, கையிலே வில்லைச் சுமையாகத் தாங்கிக் கொண்டிருப்பது வில்லிற்கு இழிவாகும். இராவணனை விட்டுவிட்டு, கையில் படையில்லாமல் இருக்கும் என்மேல், நேருக்கு நேர் நில்லாமல் மறைந்து