பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 109 நின்று அம்பு எய்வதற்குத்தானா நீ வில் பயிற்சியில் வல்லவனானது? "தாரம் மற்றொருவன் கொளத் தன்கையில் பார வெஞ்சிலை வீரம் பழிப்பதே நேரும் அன்று மறைந்து கிராயுதன் மார்பின் எய்யவோ வில்இகல் வல்லதே' (99) தாரம் - மனைவி. பாரம் = சுமை. நிராயுதன் = படை வைத்திராதவன். மனைவியைக் கவர்ந்தவன் மேல் அம்பு எய்யாத வில், பழிப்புக்கு இடமான வெற்றுச் சுமையாம். உனக்கு வில் ஒரு கேடா? - என்று இழித் துரைப்பதுபோல் உள்ளது இது. “அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு அரிவாளாம்” என்னும் பழமொழி ஈண்டு நினைவுகூரத் தக்கது. போராளி ஒருவன் தன் எதிரியின் படைத் தலைவனது காலை வெட்டிக் கொண்டு போய்த் தன் அரசன்முன் வைத்து, "இதோ பாருங்கள் . எதிரி படைத் தலைவனது காலை வெட்டிக் கொண்டு வந்து விட்டேன்’ என்றானாம். அதற்கு அரசன், எதிரியின் 56) ಉ೯೧L வெட்டிக்கொண்டு வருவதல்லவா வீரம்? என்றானாம். உடனே போராளி, நான் என்ன செய்வேன். எனக்கு முன்னமேயே எவனோ தலையை வெட்டிக்கொண்டு போய்விட்டான்-அதனால் நான் காலை வெட்டிக்கொண்டு வந்தேன் என்றானாம். தலையில்லாத முண்டத்தின் காலை வெட்டியதுபோல், கையில் படைக்கலம் எதுவும் இல்லாதவன் மேல் அம்பு எய்யப்பட்டுள்ளது-அதுவும் மறைந்து நின்று எய்யப்பட்டது-என்று இழித்துரைக்கிறான் வாலி. இராமனின் மறு மொழி: தன்மேல் குற்றம் சாட்டிய வாலியிடம், முறையாக நடந்து கொண்ட சுக்கீரீவனுக்காக நான் உன்னைக்கொல்வது குற்றம் இல்லை என்பதை நிலைநாட்ட, இது நடந்துள்ள