பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வாலி.சுக்கிரீவன் வரலாற்றை நினைவுகூரும் வகையில் மறுமொழி கூறுகிறான். வரலாறாவது: வாலியே! உன்னோடு போர் புரியவந்த மாயாவி என்னும் அசுரனை நீ விரட்டிக் கொண்டு சென்றாய். அவன் பாதாளத்தில் போய்ப் பதுங்கிக் கொண்டான். நீ சுக்கிரீவனைப் பாதாள நுழைவாயிலில் காவலுக்கு வைத்து விட்டுப் பாதாளத்தில் சென்று மாயாவியோடு போர் புரிந்தாய் போலும். பன்னெடுநாளாய் நீ திரும்பி வாராமையால் மாயாவியால் இறந்துவிட்டிருப்பாய் என உன் தம்பி எண்ணி, மாயாவி திரும்பி மேலே வரா திருப்பதற்காகப் பாதாளப் புகுவாயிலைக் கற்களால் அடைத்து விட்டான். இங்குள்ள பலர் சுக்கிரீவனை அரசை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டியும், அவன், அண்ணன் இருக்க நான் ஏற்கேன் எனக் கூறிவிட்டான். பின்னர் அவனைப் பலரும் வற்புறுத்தியதால் அவன் அரசேற்றான். நீ பல நாள் போர் புரிந்து மாயாவியைக் கொன்று அடைத்திருந்த கற்களைத் தகர்த்து இங்கு வந்தாய். உன் தம்பி முறைதவறி உன் அரசைப் பறித்துக் கொண்டதாக நீ தவறர்யெண்ணி அவனைக் கொல்ல முற்பட்டாய். அவன் பல இடங்களில் ஒடித்திரிந்தும் நீ அவனை விடாமல் கொல்வதற்காகப் பின் தொடர்ந்தாய். உருசிய முகமலைக்கு நீ வந்தால் இறந்து விடுவாய் என்னும் வைவு (சாயம்) உனக்கு இருப்பதால், நீ அங்கு வரமாட்டாய் என எண்ணிச் சுக்கிரீவன் அம்மலையில் தங்கலானான். நீ அவன் மனைவியையும் அவனுக்கு உரிய உடைமைகளையும் பற்றிக் கொண்டதால், அவன் என் துணையை வேண்டினான். வலியவரால் துன்புறும் மெலியவர்க்கு உதவுவதும் அறமாகும் என எண்ணி உன்னைக்கொன்று அவனுக்கு உதவும் முயற்சியை மேற்கொண்டேன். உன்னை ஒத்த வலிமை அவனுக்கும் இருப்பினும், எதிரியின்