பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 111 வலிமையில் பாதி உனக்கு வந்து விடும்படியான வரம் நீ பெற்றிருப்பதால் அவன் உனக்குத் தோற்று என் உதவியை நாடினான். அந்த வரம் உண்மையாலேயே யானும் மறைந்திருந்து தாக்கினேன். நீ மாற்றான் மனைவியைக் கவர்ந்தது முறையற்றது. இந்த வகையில் நீயே பெரிய குற்றவாளி. சுக்கிரீவனும் யானும் குற்றவாளிகள் அல்லர்என இராமன் மறுமொழி கூறினான். இங்கே நடுநின்மையுடன் நாம் ஆராய்ந்து பார்ப்போம். பாதாள நுழைவாயிலை அடைத்திருந்ததால், வாலி வரக் கூடாது எனச் சுக்கிரீவன் எண்ணிச் செய்ததாக வாலி எண்ணக் கூடுமல்லவா? மேலே வாலி வந்து பார்த்ததும், சுக்கிரீவன் தற்காலிக ஆட்சி புரியாமல் பேரரசாக ஆண்டு கொண்டிருப்பது போன்ற அமைப்பு இருப்பதாக எண்ணினான். அதனால் பெருஞ்சினங் கொண்டு, சுக்கிரீவனின் மனைவி உட்பட்ட உரிமைப் பொருள்களை எல்லாம் தான் பற்றிக்கொண்டு சுக்கிரீவனைத் துரத்தினான்-என்பதாக வாலியின் செயலுக்கும் அறநெறி கற்பிக்கலாம் அல்லவா? - - உலகியல் வரலாற்றில், அரசாண்டு கொண்டிருப்பவன் அயலிடம் சென்றிருக்கும்போது அடுத்தவன் வந்து ஆட்சியை எளிதில் பிடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி இல்லாததன்று, ஆப்பிரிக்கக் கண்டித்திலுள்ள கானா என்னும் நாட்டைத் தலைவராக ஆண்டுகொண்டிருந்த நக்ருமா (என்க்ருமா) என்பவர் சீனா சென்றிருந்தபோது, கானாவில் மேல் மட்டத்தில் இருந்தவர்கள் அதிரடிப் புரட்சி செய்து ஆட்சியைப் பறித்துக் கொண்ட வரலாறு உலகம் அறிந்ததே. இங்கே, சேக்சுபியரின் நூலிலுள்ள வரலாறு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டாம் ரிச்சர்டு மன்னன் (King Richard Il) இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்தான்.