பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு அவன் தன் பங்காளியும் பகையாளியுமாகிய பாலிங்புரோக்” என்பவனை நாடு கடத்தியிருந்தான். நிலைமை இவ்வாறிருக்க ரிச்சர்டு மன்னன் மேற்பார்வை யிடுவதற்காக ஒருமுறை ஸ்காட்லாந்துக்குச் சென்றிருந்தான். அப்போது நாடுகடத்தப் பட்டிருந்த பாலிங்புரோக் (Bolingbroke) இங்கிலாந்துக்குள் தன்னைச் சேர்ந்தோருடன் வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். இவன் ரிச்சர்டைச் சிறையில் அடைத்துப்பின் கொலையொறுப்பு (மரண தண்டனை) கொடுத்துக் கொன்றும் விட்டான். இவ்வாறு சுக்கிரீவன் நடந்து கொண்டிருக்கிறான் என்று வாலி ஐயுற் றிருக்கலாம் அல்லவா? - சுக்கிரீவன் குற்றம் அற்றவன் என்பதை உறுதி செய்ய இராமன் கூறிய மறுமொழியாகப் பதினொரு பாடல்களைக் கம்பர் செலவிட்டுள்ளார், அவற்றுள் இரண்டினைக் காண்போம்: வாலியே! உன் தம்பியை அரசாளும்படி முதியவர்கள் வற்புறுத்தியபோது, அவன் ஒத்துக்கொள்ளாமல், என் அண்ணன் இதுவரையும் திரும்பாததால் அவனை மாயாவி கொன்று விட்டிருக்க வேண்டும்; எனவே யான் சென்று மாயாவியை அவன் சுற்றத்துடன் கொன்று யானும் இறந்துபடுவேன் - இந்த அரசை ஆளமாட்டேன். நான் ஆளும்படித் தகாத அறிவுரை கூறினீர்கள் - இதை நான் ஏற்கேன் - என்று உன் தம்பி சுக்கிரீவன் கூறிவிட்டான். பாடல்: - "வானம் ஆளஎன் தம்முனை வைத்தவன் தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலேன் ஊன மான உரை பகர்ந்தீர் என’ (102) தம் முன் = அண்ணன். தன்முனை வானம் ஆள வைத்தவன் = இங்கே இறந்து வானுலகம் சென்று அதை