பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 113 ஆளும்படிச் செய்த மாயாவி. கிளையின் இறத்தடிந்து = சுற்றத்தோடு அழியும்படிக் கொன்று. ஊனம் ஆன உரை : தவறான அறிவுரை. இந்தப் பாடலால் சுக்கிரீவனது தூய்மை விளங்கும். - மேலும் இராமன் சொன்னது: வாலியே நீ வந்ததும், சுக்கிரீவன் உன்னை வணங்கி மகிழ்ந்து என் தந்தை போன்றவரே! இங்குள்ள முதியவர்கள் தற்காலிகமாக ஆளும்படி எனக்கு இந்த அரசை ஏற்பாடு செய்தனர். இது உன்னுடைய அரசு இனி இதை யான் தாங்க மாட்டேன் என்று முன் நடந்தனவெல்லாம் கூறினான். நீ அவன் சொல்லை நம்பாமல் அவன்மேல் பெருஞ்சினம் கொண்டாய் - என்பது இராமன் கூற்று; "வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் எங்தை என்கண் இனத்தவர் ஆற்றலால் தந்தது உன்னரசு என்று தரிக்கலான் முந்தை உற்றது சொல்ல, முனிந்துநீ' (104) 'தரிக்கலான்’ என்பது, சிறிது நேரங்கூட இனி இந்த அரசைத் தாங்கி ஆளான் - என்னும் பொருளது. சுக்கிரீவன் முறையாக நடந்து கொண்டான் என்பது இந்தப் பாடலாலும் பெறப்படும். வாலியின் எதிர்மொழி வாலியின் குற்றச்சாட்டுக்கு இராமர் கூறிய மறு மொழிக்கு எதிர்மொழி கூறுகிறான் வாலி: ஐயனே! நீங்கள் சொல்லும் அறநெறி - அரச முறைநெறி எல்லாம் வானரங்களாகிய எங்களுக்கு இல்லை. அந்த முறையில் நான்முகன் எங்களைப் படைக்கவில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் - என்பதுபோல் எங்களுக்கு எது இன்பமாகத் தெரிகிறதோ அதைப் பெற்றுத் துய்ப்போம். கற்பைப் பற்றிய கவலை எங்கட்கு இல்லை. மணம், மறை,