பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - கிட்கிந்தா காண்டத் திறனாய்வு குணம், குலம் முதலியன எங்கட்குத் தேவையில்லை. அவ்வப்போது தோன்றும் உணர்வுகட்கு ஏற்ப நடந்து கொண்டு அந்த உணர்வுகட்குச் சுவையூட்டுவோம். எனவே, யான் குற்றம் இல்லாதவன் என்றான் வாலி: 'மணமும் இல்லை மறைநெறி வந்தன குணமும் இல்லை குலமுதற்கு ஒத்தன உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கலால் கிணமும் நெய்யும் இணங்கிய கேமியாய்' (113) நேமியான் = ஆழிப் படையுடைய திருமாலின் தெய்வப் பிறவியாகிய இராமன். இது வாலிக்குத் தெரியா விடினும் நூலாசிரியருக்குத் தெரியுமாதலின், கதை உறுப்பினர்கள் சொல்வதுபோல் சொல்லி விடுவது இலக்கிய மரபு. மக்கள் குலத்திலும் வரன்முறையின்றி உணர்வு சென்றவழிச் செல்லுபவனை நோக்கி அட் மிருகமே! அட குரங்கே! என்று சொல்வதைக் காணலாம். ஆகவே, இவ்வாறெல்லாம் கூறி வாலி தன் தவறை மறைக்கிறான். இராமனின் மறுஉரை வாலியே! நீ விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது. தெய்வத்தொடர்பு உனக்கு உண்டு. மக்களைப் போன்ற எல்லா நிலைகளும் அறிந்தவன் நீ. எனவே, நீ விலங்கு இல்லை. இவ்வாறு கூறுதல் தகாது, "நலம்கொள் தேவரின் தோன்றி கவை.அறக் கலங்கலா அறகன்னெறி காண்டலின் விலங்கலாமை விளங்கியது ஆதலால் அலங்கலார்க்கு இதுஅடுப்பது அன்றாமரோ (116) வாலி திங்களின் மகனாதலால் தெய்வத் தொடர்பு Ꮽa .6Ꮘ) L_ᏓᏞ] © 16öᎢᎱᎢ©uᎱᎢ6ᏡᎢ .