பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 115 ஆதி மூலமே பொய்கையில் முதலை தன்னைப் பற்றி இழுத்திட்ட போது, திருமாலை எண்ணி ஆதிமூலமே என்று அழைத்த தின் பயனாய் வீடு பெற்ற கசேந்திரன் என்னும் யானையும் விலங்குதானா? அதற்கு உணர்வு இல்லையா? 'மாடு பற்றி இடங்கர் வலித்திடக் கோடு பற்றிய கொற்றவன் கூயதோர் பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் வீடு பெற்ற விலங்கும் விலங்கதோ?' (118) மாடு = பக்கம், இடங்கர் = முதலை, வலித்தல் = இழுத்தல், கோடு= சங்கு, கோடு பற்றிய கொற்றவன் = சங்கு ஏந்திய திருமால், பயம்=பயன். இப்பாடலில் ஒரு புராணக்கதை ஒளிந்து கொண்டுள்ளது. இந்திரத்யும்நன் என்னும் மன்னன் மிகவும் ஆழ்ந்து திருமாலை வழிபட்டுக் கொண்ருந்தபோது, அகத்தியர் அவனிடம் வர, அவன் எழுந்து அவரை வரவேற்காததால், திமிர் கொண்ட யானை போல் நீ நடந்து கொண்டதால் யானையாகப் போவாயாக என வைவு (சாபம்) இட்டார். அதனால் அவன் கசேந்திரன் என்னும் பெயருடைய யானையாகப் பிறந்து காட்டில் வசித்தான். பொய்கையில் இறங்கியபோது முதலையற்றிய தால் 'ஆதிமூலமே எனத் திருமாலை எண்ணிக் கூவியதும், திருமால் தோன்றி முதலையின் பிடியிலிருந்து விடுவித்துக் காத்தார். இதுவும் விலங்குதான். இதற்கு உயர்ந்த உணர்வு. தோன்ற வில்லையா என்ன? எருவைக்கு அரசு நல்ல சிந்தை உடைய சடாயு, கவர்ந்து சென்ற இராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்காக அவனோடு போர் புரிந்து உயிரையும் கொடுத்தது தெரியாதா?