பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்கிந்தா காண்டம் கடவுள் வாழ்த்து நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து கூறி யிருப்பினும், ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் கடவுள் வாழ்த்து கூறப்பட்டுள்ளது. நான்முகன், திருமால், சிவன் என்னும் மூன்று தெய்வ நிலைக்கு ஏற்பப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மும்மைத் தொழிற் பண்புடைய முதற்பொருளாகிய இறைவன், தன்னிடமிருந்து தோன்றும் எல்லாத் தத்துவப் பொருள்களும் - தன் முதன்மையைச் சொல்லிப் போற்றுதற்கு ஏற்ற எல்லா உலகங்களும் - தனக்கும் உலகங்கட்கும் இடைநின்ற எல்லா உயிர்களும் - அமைந் துள்ள உயிர்களின் உணர்வுகட்கு உணர்வும்-ஆக உள்ளான். இக்கருத்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் வருமாறு: 'மூன்றுரு எனக்குணம் மும்மையாம் முதல் தோன்றுரு எவையும் அம்முதலைச் சொல்லுதற்கு ஏன்றுரு அமைந்தவும் இடையில் கின்றவும் ஊன்றுரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான்’ என்பது கடவுள் வாழ்த்துப் பாடல். இது மிகவும் கடினமான தத்துவப் பாடல். இதற்குப் பலர் பலவாறு உரை கண்டுள்ளனர். யான் பல உரைகளைப் படித்து நெடுநேரம் எண்ணிப் பார்த்து, எனக்குத் தோன்றிய அளவில் ஒருவாறு இந்த உரையை எழுதியுள்ளேன். மூன்று உரு = நான்முகன், திருமால், சிவன். மும்மைக் குணம் = படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில் பண்பு. முதல் = முதல் பொருளாகிய இறைவன். இடையில் நின்ற(ன) = கடவுள் உயிர் உலகம் என்பனவே உள்ள பொருள்கள்; இம்மூன்றனுள், கடவுளுக்கும் உலகப் பற்றுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்என்றெல்லாம் பொருள் கொள்ளல் வேண்டும்.