பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சடாயுவை நாங்கள் தந்தையாக எண்ணி வழிபடுகிறோம். சடாயு கழுகுகட்கு அரசு. இதையும் நீ எண்ணிப்பார்: 'சிங்தை நல்லறத்தின் வழிச் சேர்தலால் பைங்தொடித் திருவின் பரிவு ஆற்றுவான் வெந்தொழில் துறை வீடுபெற்று எய்திய எங்தையும் எருவைக்கு அரசு அல்லனோ? (119) பைந்தொடித்திரு = சீதை, வெந்தொழில்துறை = போர்புரிதல், எருவை = கழுகு. சீதையை மீட்கக் கழுகு அரசனாகிய சடாயு இராவணனோடு போரிட்டுக் கீழே விழுந்து கிடந்தபோது, அவ்வழியாக வந்த இராம இலக்குமணர் முன்பு நடந்ததைச் சடாயுவால் அறிந்தனர். பின்னர்ச் சடாயு உயிர் நீத்ததும், தந்தைக்குப் பிள்ளை செய்யவேண்டிய இறுதிக் கடனைச் சடாயுவைத் தந்தை யாகக் கொண்டு இவர்கள் செய்தனர். அதனால்தான் எருவைக்கு அரசை எந்தை என்றான். மக்கள் பிறவி யல்லாத சடாயுவுக்கு உயர்ந்த உணர்வு இருக்க வில்லையா என இராமன் வாலிக்குக் கூறுகிறான். மக்கள் விலங்கு - இன்னும் கேள் வாலி தக்கவை இவை - தகாதன இவை என உணர்ந்து அதற்கேற்பச் செயலாற்றாத மக்களும் விலங்கேயாவர். உயரிய எண்ணத்துடன் அற நெறி நின்றொழுகும் விலங்கும் தெய்வமாகும். "தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (121) புத்தேளிர் = தேவர். மனு நெறி = உயரிய அறநெறி.