பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் [17 "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்' (410) என்னும் குறள் ஈண்டு நினைவு கூரத்தக்கது. காலின் ஆற்றல் வாலியே! நீ ஒன்றும் அறியாத விலங்கா? காலனைக் கடிந்த சிவனுக்கு வழிபாடு செய்து பெற்ற வரத்தால், திருமாலால் காக்கப்படும் நான்கு பூதங்களின் ஆற்றலையும் பெற்றிருக்கிறாயே. இதற்கு என்ன பொருள்? விலங்கா நீ? “காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் பாலின் ஆற்றிய பத்தி பயத்தலான் மாலினால் தரு வன்பெரும் பூதங்கள் - காலின் ஆற்றலும் ஆற்றுழி கண்ணினாய்’ (122) காலன் = எமன். கணிச்சியான் = மழுப்படை உடைய சிவன். பூதங்கள் நான்கு = காற்று, தீ, நீர், மண் என்பன. திருமால் காத்தல் கடவுள் ஆதலின், ‘மாலினால் தரு பூதங் கள்’ எனப்பட்டன. தருதல் = காத்தல். சிவனை நோக்கித் தவம் இயற்றிப் பெரிய ஆற்றல் பெற்றுள்ள நீ விலங்கா? என்று வினவுகிறான் இராமன். ஞான சம்பந்தரின் திருக்குரங்காடு துறை என்னும் ஊர்த் தேவாரப் பதிகத்தில் உள்ள 'கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டுபோற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்’ (7) லேமா மணிகிறத்து அரக்கனை இருபதுகரத்தொ டொல்க வாலினால் கட்டியவாலியார் வழிபட மன்னும்கோயில்” (8) என்னும் பாடல் பகுதிகளாலும் வாலியின் சிவ வழிபாடு தெரியவரும். பிறந்த குடியினாலும் பிறவற்றாலும் தாழ்ந்த மரபுடையார் நடுவிலும் உயர்ந்தோர் உளர். உயர்ந்த