பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு தவத்தோர் - தேவர் ബുഖ് ரிடத்தும் இழிதொழில் செய்வோர் உளர். "மேவரும் தருமத் துறை மேவினார் ஏவரும் பவத்தால் இழிந் தோர்களும் தாவரும் தவரும் பலதன்மை சால் தேவரும் உளர் தீமை திருத்தினார்’ (124) பிறப்பால் தாழ்ந்த கழுகு மரபில் தோன்றிய சடாயு உயர்ந்த செயல் புரிந்தார். தபசிகளுள் பெரியவராகிய விசுவாமித்திரர் மேனகைபால் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தேவரின் தலைவனாகிய இந்திரனே அகலிகையைக் கெடுத்தான். எனவே, பிறப்பால் விலங்கு என்று சொல்லித் தப்பிக்க இயலாது என்றெல்லாம் இராமன் மிகவும் திறம்படக் கூறி வாலியை மடக்கி விட்டான். இராமன் கூறியதோ - அல்லது - இராமன் கூறியதாக ஆசிரியர் படைத்துக் கூறியதோ - யாதாயினும் ஆக - இது மிகவும் திறமுள்ள வாதமாகும். மறைந்தது ஏன் இராமனின் வாதத்தைக் கேட்டு அயர்ந்து போன குரங்கரசனாகிய வாலி, நீங்கள் சொல்லியது சரி - ஆனால் போர்க்களத்தில் நேரில் வராமல், வேடன் மறைந்து நின்று பறவை - விலங்குகளை எய்தல் போல, மறைந்து நின்று என்மீது அம்பு எய்ததற்கு உரிய பொருத்தமான காரணம் யாது என வினவினான். 'அவ்வுரை அமையக் கேட்ட அரிக்குலத்து அரசு மாண்ட செவ்வியோய் அனையது ஆக! செருக்களத்து எதிர்த்து எய்யாதே