பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 119 வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்ப லுற்றான்' (125) அரிக்குலம் = குரங்கு இனம். மாண்ட = மாட்சிமையுடைய. செவ்வியோன் = இராமன். புளிஞர் = வேடர். வேடர்களே மறைந்திருந்து அம்பெய்வார்கள். இது இழி செயல் இல்லையா என்கிறான். 'தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று' (274) என்னும் குறள் ஈண்டு நினைவு கூரற் பாலது. இராமன் செயலையும், தவம் மறைந்து அல்லவை செய்தல் போன்ற இழி செயலாகவே வாலி உறுதிபடக் கூறுகிறான். இலக்குவனின் பதில் உரை நெடுநேரம் வாலியோடு வாதம் புரிந்து வந்தான் இராமன். மறைந்து நின்று அம்பு எய்தததன் காரணம் என்ன என்ற வினாவிற்கு இராமனை விடையிறுக்க விடாமல் இலக்குவன் விடையிறுக்க லானான். இலக்குவன் பதில் இறுப்பதற்கு உரிய காரணம் என்னவாய் இருக்கலாம்? நாடக வழக்கில், தொடர்ந்து ஒருவரே பேசிக் கொண்டிருப்பதனினும் இடையே மற்றொருவரும் பேசுவது, அலுப்புத் தட்டாமல் சுவையா யிருக்கும். பக்கச் சொல் பதினாயிரம் பொன் பெறும் என்பது ஒரு பழமொழி. இன்னொருவரும் உடன் பேசின், சொல்லும் கருத்து வலிவுடையதாகும். இந்த வினாவிற்கு உரிய பதில் சிக்கலானது - தரும சங்கடமானது. ஆதலின் இலக்குவன் பதில் உரைக்கலானான். இதற்குப் பதில்கூற இராமனது உள்ளம் போதிய அளவு ஒருப்படவில்லை யாதலினாலும்