பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இலக்குவன் சொல்லவேண்டிய தாயிற்று. அவன் விடுத்த விடையாவது: வாலியே! உனக்கு முன்பே உன் தம்பி வந்து, மனைவி யையும் மற்றவற்றையும் இழந்த இரங்கத் தக்க தன் நிலையைக் கூறித் தன்னைக் காக்குமாறு அடைக்கலம் வேண்டினான். அவ்வாறே, உன்னைக் கொன்று உன் தம்பியைக் காப்பதாக அடைக்கலம் ஈந்து விட்டார். இந்த நிலையில், உன் எதிரே இராமர் வரின், நீயும் இராம ரிடத்தில் உன்னைக் காக்குமாறு அடைக்கலம் கேட்கின் முன்னதற்கு முரணாகும். அடைக்கலம் என்று கேட்டு விட்டால் இராமரால் தட்டமுடியாது. எனவேதான் அவர் உன் முன்னே வரவில்லை. என்று விடையிறுத்தான். “முன்புகின் தம்பிவந்து சரண்புக முறையிலோயைத் தென்புலத்து உய்ப்பன்என்று செப்பினன் செருவில்கீயும் அன்பினை உயிருக்காகி அடைக்கலம் யானும் என்றி என்பதுகருதி அண்ணன் மறைந்துகின்று எய்தது என்றான்' (126) முறையிலோன் = முறையற்ற வாலி. தென்புலத்து உய்த்தல் - இறந்தவர்கள் இருக்கும் தென்புலத்திற்கு அனுப்புதல் - அதாவது கொல்லுதல். அன்பினை உயிருக் காகி என்றால், உயிரின்மேல் அன்பு . வைத்து - என்பது பொருளாம். இலக்குவனும் விட்டுக் கொடுக்காமல் அடைத்துப் பேசிப் பொருத்தமாகப் பதில் இறுத்துள்ளான். வாலியும் ஒப்புக் கொண்டான். வாலியின் பணிவு இலக்குவனின் மொழிகேட்ட வாலி தன் பிழை உணர்ந்து இராமனை நோக்கிப் பணிமொழி கூறுகிறான். எவ்வுயிர்க்கும் தாயான ஐயனே! நாய் போன்ற எனது இழி செயலைப் பொறுத்தருள வேண்டுகிறேன்: -