பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 12 | "தாயென உயிர்க்குகல்கித் தருமமும் தகவும் சார்பும் நீயென கின்றகம்பி நெறியினின் நோக்கும் நேர்மை நாயென கின்ற எம்பால் நவையற உணர லாமே தீயன பொறுத்தி என்றான் சிறியனசிந்தி யாதான்' (128) எல்லா நல்லனவாகவும் இராமன் விளங்குகின்றானாம். தன்னை நாய் எனவும் தன் நவைகளைப் (குற்றங்களைப்) பொறுத் தருளும்படியும் வேண்டித் தன்மேல் அம்பு எய்த இராமனிடம் நாய்போல் குழைகிறான் இங்கே, 'யானை அறிக் தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்' (213) என்னும் நாலடியார்ப் பாடல் பகுதி ஒப்புநோக்கற் பாற்று. தன்மேல் வேல் எறிந்தாலும் தலைவனிடம் வாலைக் குழைத்துக்கொண்டு நிற்குமாம் நாய். அதுபோல், அம் பெய்த இராமனிடம் வாலி குழைகிறான். எல்லாம் அவன் மேலும் கூறுவான் வாலி: நாயினேன்மேல் அம்பு எய்ய, உயிர்போகும் வேளையில் எனக்கு மெய்யறிவு தந்தாய். எல்லாமாக நீ இருக்கிறாய் என்று பாராட்டுக் கூறுகிறான்: 'ஏவு கூர் வாளியால் எய்து நாயடியனேன் ஆவிபோம் வேலைவாய் அறிவுதந்து அருளினாய் மூவர்நீ முதல்வன்ரீ முற்றும்நீ மற்றும்ே பாவம்நீ தருமம்நீ பகையும்நீ உறவும்t' (130) இப்பாடல் பெரிய மெய்யுணர்வுப் (தத்துவப்) பாடல் ஆகும். இராமன் திருமாலின் தெய்வப்பிறவி யாதலின், வாலி இங்ஙனம் கூறியதாகக் கம்பர் பாடியுள்ளார். கடவுளே எல்லாமா யுள்ளார் என்று கூறுபவரை நோக்கி, கடவுள் பாவியாகவும் தீமை செய்யும் பகைவனாகவும்