பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இருப்பது ஏன் என வினவுபவர் உண்டு. தீயவரின் தீமைக்கு ஒறுப்பு (தண்டனை) கொடுக்கும்போது பாவியாகவும் பகைவனாகவும் கடவுள் செயல்படுகிறார் என்பதை இதற்கு விடையாகப் பகரலாம். இதற்குமேல் நாம் விளக்கம் கூறத் தொடங்குவோமாயின் அது எங்கெங்கோ போய்முடியும். அத்துவிதம் என்னும் கொள்கையின் தலையிலே கைவைக்க வேண்டிவரும். இம்மட்டோடு அமையலாம். அம்பே அறம் கம்பர் இங்கே சுவையான கருத்து வெளிப்பாடு ஒன்று செய்துள்ளார். வாலி கூறுகிறான். முப்புரங்களை எரித்த சிவன் முதலானோர் எனக்கு அளித்த வரங்களை உருவியும், திண்மை சான்ற எனது மார்பை உருவியும், என் உயிரைச் சுவை பார்க்கின்ற நினது அம்பைத் தவிர வேறு அறம் இல்லை - என்கிறான்: - "புரமெலாம் எரிசெய்தோன் முதலினோர் பொருவிலா வரமெலாம் உருவிஎன் வசையிலா வலிமைசால் உரமெலாம் உருவிஎன் உயிரெலாம் நுகரும்கின் சரமலால் பிறிதுவேறு உளதரோ தருமமே (131) இங்கே, குலசேகர ஆழ்வாரின் பெரிய திருமொழி என்னும் நூலிலுள்ள ஒரு பாடல் ஒப்புநோக்கத் தக்கது: 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால் மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாே ஆளா உணதருளே பார்ப்பன் அடியேனே' (5:4) என்பது பாடல், மருத்துவன் வாளால் அறுத்து மருத்துவம் செய்யினும் பிணியாளி வாள்மேலேயோ மருத்துவன் மேலேயோ வெறுப்பு காட்டுவதில்லை. மருத்துவனின் வாள் (கத்தி) செய்தது போன்ற வேலையை இராமனின் அம்பு செய்திருக்கிறது. அதனால் வாலி வருந்தவில்லை.