பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 123 சிவன் முதலானோர் அருளிய வரங்கள் பலிக்கவில்லை என்று கூறுவதன் வாயிலாக இராமனது அம்பின் வலிமை உயர்த்தப்பட் டுள்ளது. இராமன் வாலியின்மேல் அம்பு போட்டு இறக்கச் செய்ததால், அவன், மேலும் எந்தத் தீமையும் செய்ய மாட்டான். ஆதலால், இராமனது அம்பு அவனுக்கு அறமாயிற்று. இதைக் கொண்டு, உலகியலில், ஒருவர் மற்றொருவர் தீமை செய்யாமல் இருப்பதற்காக அவரைக் கொன்றுவிட வேண்டும் எனத் தொடங்கிவிடக் கூடாது. இது தொடர்பாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. அதாவது: சிலரைக் கொலை செய்த கொலையாளி ஒருவனுக்காக அவன் அமர்த்திய வழக்குரைஞர் நீதிபதியிடம் பின்வருமாறு வாதிட்டாராம்: அவனால் கொலை செய்யப்பட்டவர்கள் மேலும் இவ்வுலகில் இருந்து கொண்டு பாவம் செய்து நரகத்திற்குச் செல்லாமல் விரைவில் வீடுபேறு அடைவார்க ளாதலின் கொலையாளி நல்லதே செய்திருக்கிறான்-எனவே அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்று கூறி, கீதையிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டி வாதாடினாராம். நீதிபதியும் கீதை படித்தவர் போல் தெரிகிறது. அப்படி யென்றால் கொலையாளிக்கு நாம் இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) தந்து கொன்றுவிடின், அவன் மேலும் தீமை செய்து பெரிய நரகத்திற்குப் போகமாட்டானாதலின் அவனுக்கு இறப்பு ஒறுப்பு தருகிறேன் என்று நீதிபதி தீர்ப்பு கூறினாராம். இராமாயணக் கதையில், கொலை செய்யப்பட்ட வாலியே இவ்வாறு கூறியதால், இதனை மேற்கூறிய உல்கியல் செய்தியோடு தொடர்பு படுத்தலாகாது. அவ்வாறு தொடர்புபடுத்தின், உல்கில் எல்லாரும் கொல்லப்பட வேண்டியராவர். பிறகு உண்மையான மனிதனைத் தேவையின்றித் தேடவேண்டி வரும்.