பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பொதுமையான் மேலும் வாலி கூறுவது! நீ எல்லா உயர்திணைப் பொருளாகியும் எல்லா அஃறிணைப் பொருளாகியும், எல்லாப் பருவங்களாகியும் எல்லாப் பயன்களாகியும், பூவையும் நறுமணத்தையும் பிரிக்க முடியாதது போல், மேற்சொன்ன இவற்றிலிருந்து பிரிக்கமுடியாத பொதுப் பொருளாய் உள்ளாய். எனவே, உன்னை அறிவினால் அறிந்து கொண்டேன். எனவே, எனக்கு வீடு பேறு கிடைப்பது அருமையாகாது. - "யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய் பூவும் கல் வெறியும்ஒத்து ஒருவரும் பொதுமையாய்! யாவன் நீ யாவதென்று அறிவினார் அருளினார் தாவரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய்!” (132) இருது=பருவம். வெறி= மணம், ஒருவரும்=ஒருவ அரும்= பிரிக்க முடியாத தாவரும்=தாவ அரும்=கெடுதல் இல்லாத. பதம்= வீடுபேறு. பொன்னே பல அணிகலன்களா யும், மண்ணே பல கலங்களாயும்(பாத்திரங்களாயும்),அரிசியே பல சிற்றுண்டிகளாயும் மாறுவதுபோல், கடவுளே பல பொருள்களாயும் இருக்கிறார் என இரண்டற்ற கொள்கை யினர் உரைப்பர். கடவுளே எல்லாமா யுள்ளார் எனில், அவர் எல்லாவற்றிற்கும் பொது ஆனதால் பொதுமையாய்” என வாலியின் வாயிலாகக் கம்பரின் எழுத்தாணி எழுதியுள்ளது. எல்லாப் பொருள்களிலிருந்தும் கடவுளைப் பிரிக்கமுடியாது என்பதற்கு, “பூவும் வெறியும் ஒப்புமை காட்டப்பட்டுள்ளன. பூவிலிருந்து இதழையோ-மகரந்தத் தையோ-சூலகத்தையோ பிரிக்கலாம்-ஆனால் பூவிலிருந்து அதன் மணத்தைத் தனியே பிரித்தெடுக்க இயலாதன்றோ? ஈண்டு,