பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 125 'வண்ணப் பூவும் மணமும்போல...... கன்னல் தமிழும் நானும் அல்லனோ” (இசையமுதம்) என்னும் பாவேந்தரின் பாடல் பகுதி ஒப்புநோக்கத்தக்கது. இராமன் தனக்கு நிகர் தானே-அவனுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது-ஆதலால் தனிமையோய் எனப் பட்டான். வெற்றரசும் வீட்டரசும் ஐயனே! நீ எனக்கு ஈந்த தண்டனையே எனக்கு வீடு பேறு தருவதாகும். இதனினும் வேறு உதவி உண்டோ? என்னைக் கொல்வதற்காக நின்னை அழைத்து வந்த என் தம்பி சுக்கிரீவன் தான் வெற்று அரசை அடையலானான்; யானோ வீட்டு அரசை (வீடுபேற்றை) அடையச் செய்தான். "தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே" (133) "மற்றினி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மானக் கொற்றவ! நின்னை, என்னைக் கொல்லிய கொணர்ந்து தொல்லைச் சிற்றினர், குரங்கி னோடும் தெரிவுறச் செய்த செய்கை வெற்றரசு எய்தி எம்பி வீட்டரசு எனக்கு விட்டான்' (134) கொற்றவன் - இராமன். தொல்லைச் சிற்றினக் குரங்கு = தொன்று தொட்டுச் சிற்றின விலங்குகளாய் இருக்கும் குரங்குகள். வாலி, சுக்கிரீவன், அனுமன், அங்கதன் முதலானோர் குரங்கினத்தில் உயர்ந்தவரா யிருக்கலாம். ஆனால், பொதுவாகக் குரங்கு இனம் என்று எடுத்துக் கொள்ளின், குரங்கினம் முதல் முதலாகத் தோன்றி உருவான காலத்தில் என்ன செய்ததோ அன்னதையே