பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பம்பைப் படலம் இராமனும் இலக்குவனும் காட்டில் சென்றுகொண் டிருந்தபோது சுக்கிரீவன் வாழும் இரலை என்னும் மலையை நோக்கி நடந்தனர்; அம்மலையடிவாரத்தில் உள்ள பம்பை என்னும் பொய்கைக் கரையை அடைந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கம்பர் பம்பையைப் புனையத் (வருணிக்கத்) தொடங்கி விட்டார். நீர்நிலை களையும் சோலைகளையும் புனைவது புலவர்கட்குச் சுவை பயப்பதன்றோ? மரபுநிலையும் சூழ்நிலையும் மாந்தர்க்குக் குடும்ப மரபுவழி வந்த பண்புநிலை 'மரபுநிலை (Heredity) என்றும், வெளியில் - சுற்றுப்புறத்தில் பழகுவதால் ஏற்படும் பண்புநிலை சூழ்நிலை (Environment) எனவும் உளவியலில் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு நிலைகளும் உயிரற்ற அஃறிணைப் பொருளுக்கும் அமைந்திருக்கும் போலும் என எண்ணத் தோன்றுகிறது. இது, கம்பரின் பொய்கைப் புனைவுப் பாடல் ஒன்றால் அறியக் கிடக்கின்றது. அது : பொய்கையில் இயற்கையாகத் தெளிந்துள்ள (தெளிவான) நீர், ஒன்பான் மணிகள் பதித்த கரைகளில் அவ்வம் மணிகட்கு எதிரே அவ்வம்மணியின் நிறத்தைக் காட்டு கிறதாம். அடுத்தது காட்டும் பளிங்கு என்றார் வள்ளுவர். இங்கே பளிங்கு எ ன்பது தெளிந்த நீர். அடுத்தது என்பது ஒன்பான் மணிகள். பளிங்கு போன்ற தெளிவான நீர்