பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இப்போதும் செய்கின்றது. ஆனால் மக்கள் ஆண்டுக்கு ஆண்டு - நாளுக்குநாள் - புதியன செய்கின ரன்றோ? குரங்குகள் இவ்வா றில்லாமையால் தான், 'தொல்லைச் சிற்றினக் குரங்கு எனப்பட்டது. தொல்லை பழமை. சிற்றினம் என்பது, உயர்திணை அல்லாத - அஃறிணை என்பதைக் குறிக்கிறது. . சுக்கிரீவன் பெற்ற நன்மையினும் வாலி பெற்ற நன்மையே பெரிதாம். இங்கே மாணிக்கவாசகரின் திருவாசகப் பகுதி ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் இறைவனை நோக்கி, நீ என்னை ஏற்றுக்கொண்டு உன்னை எனக்குத் தந்துவிட்டாய். எனவே, சங்கரா! இழிந்த என்னை நீ பெற்றாய் - உயர்ந்த உன்னை நான் பெற்றேன். எனவே நம் இருவருள் யார் கெட்டிக்காரர் - யார் கொடுத்து வைத்தவர் என வினவுகிறார் கோயில் "தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுர்ர்": அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது பெற்ற தொன்று என்பால்" (10) என்பது பாடல் பகுதி. மணிவர்சகர் சிவானந்தம் பெற்றாராம். சிவன் இவரிடத்திலிருந்து ஒன்றும் பெற வில்லையாம். எனவே, மணிவாகதரே சதுர ராம். இலக்கிய ஒப்புமைகாண்டல் என்ற முறையில் இது இங்கே தரப் பெற்றது. - * ' வாலியின் உயரிய பண்பு - வாலி இராமனிடம் ஓர் அருளிப் பாடு (வரம்) கேட்கிறான்; ஐயனே! என் தம்பி எப்போதாவது மது அருந்தி நிலைமாறி நினக்கு ஏதாவது தீங்கு செய்யின், என்மேல் ஏவிய அம்பாகிய எமனை அவன்மேல் ஏவாதே என வேண்டிக் கொண்டான்: