பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 127 “ஓவிய உருவ நாயேன் உளதொன்று பெறுவது, உன்பால் பூவியல் நறவம் மாந்திப் புந்திவே றுற்றபோழ்தில் தீவினை இயற்று மேனும் எம்பிமேல் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்” (135) ஒவிய உருவன் = இராமன். நறவம் மாந்தல் = மது அருந்தல். பூவியல் நறவம் = பூக்களிலிருந்து எடுத்த தேனைக் கொண்டு செய்யும் ஒருவகை மது. நெல்லைக் கொண்டு உண்டாக்கும் தோப்பி என்னும் மதுவைப் போல் இது பூவிலிருந்து எடுத்துச் செய்யப்பட்ட மது வகை யாகும். இந்தக் காலத்தில் உரோசா மலரைக் கொண்டு உண்டாக்கும் ஓர் உயரின மது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. 'தீவினை இயற்றுமேனும் என்பதில் உள்ள 'உம்' என்பது இயற்ற மாட்டான் என்னும் எதிர்மறைப்பொருளில் உள்ளது. பெறுவது ஒன்று உளது என்பது, பல கேட்க வில்லை ஒன்று கேட்கிறேன் என, பெறுவதை அருமைப் படுத்தாமல் எளிமைப் படுத்தும் பொருளில் உள்ளது. பகழி கூற்றுவனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னைக் கொல்லச் செய்த தம்பியை நி கொல்லாதே என்று வேண்டுவது எவரெஸ்ட் உயர்பண்பாகும். இங்கே "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கான நன்னயம் செய்து விடல்” (314) "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன புயத்ததோ சால்பு' (987) என்னும் குறள்களும், பகைவனுக்கு அருள்வாய் என்னும் பாரதி பாடலும், தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைப் பொறுத்தருளும்படிக் கடவுளை வேண்டிய ஏசு பெருமானின் பேரருளும், தன்னைக் கொன்ற முத்தநாதன் என்பவனுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் காவலுடன் அனுப்பி வைக்க ஆணையிட்ட கோவலூர் அரசராகிய மெய்ப்பொருள்