பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - - - - கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நாயனாரின் வரலாறும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. குரங்கினத் தொடர்பினனாகிய வாலியே இவ்வாறு செய்தது மிகவும் பாராட்டற்பாலது. அனுமன் உரியன் ஐயனே! என்னிடம் சொல்லியிருந்தால், அந்த இராவணனை வாலினால் பிணித்து இழுத்து வந்திருப்பேனே. நடந்தது நடந்து விட்டது. இனி அதைப் பேசிப் பயனில்லை. நான் கிடக்கட்டும். எது செய்யவேண்டுமெனினும் அதைச் செய்வதற்கு உரிய தகுதி உடையவன் இந்த அனுமன். இந்த அனுமன் என்பவனை உன் கையில் உள்ள வில்லாக மதிக்கவேண்டும், வில் செய்யக்கூடிய பயனை அனுமன் செய்து முடிப்பான். என் தம்பியை நின் தம்பியாக எண்ணுக. இவ்விருவரைப் போன்ற துணைவர்கள் வேறு யாரும் இலர். இவர்களின் துணை கொண்டு நீ சீதையைத் தேடி அடையலாம். "மற்றிலெ னெனினும் மாய அரக்கன்ை வாலின் பற்றிக் கொற்றவ கின்கண் தந்து குரக்கியல் தொழிலும் காட்டப் பெற்றிலென் கடந்த சொல்லின் பயனிலைப் பிறிதொன் றேனும் உற்றது செய்கென்றாலும் உரியன் இவ் அனுமன் என்றான்” (137) "அனுமன் என்பவனை, ஆழி ஐய, கின் செய்ய செங்கைத் தனுஎன நினைதி மற்றென், தம்பி கின் தம்பியாக