பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 129 நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலைt ஈண்டவ் வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய்' (138) தனு = வில். வனிதை - சீதை. இன்னோர் = அனுமனும் சுக்கீரீவனும் ஆவர். இவர்களைப் போன்றோர் ஒருவரும் கிடைக்க மாட்டார் என இவர்களின் பெருமையையும் ஆற்றலையும் அறிவித்துள்ளான் வாலி. தம்பிக்கு அறிவுரை வாலி இராமனைப் பலவாறு போற்றியபின், செயலற்று வருந்தி நிற்கும் தன் தம்பியை அழைத்து, இராமனோடு ஒன்றி யிருந்து பணி விடை செய்து உய்வாயாக என அறிவுரை கூறிப் பின் இராமனிடம் சுக்கிரீவனை அடைக்கலம் தந்தான். பின்னர் அங்கதனை அழைத்து வரும்படிச் சுக்கிரிவனை ஏவ, அவன் போய் அழைத்து வந்தான். * : வைத்தபின் உரிமைத் தம்பி மாமுகம் நோக்கி வல்லை உய்த்தனை கொணர்தி உன்றன் ஓங்கரு மகனை என்ன அத்தலை அவனை ரவி அழைத்தலின் அணைந்தான் என்ப கைத்தலத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை' (147) உரிமைத் தம்பி = சுக்கிரீவன். உவரி நீரைக் கலக்கினான் அமிழ்தம் எடுப்பதற்காகக் கடலைக் கடைந்த வாலி. பயந்த காளை = வாலி பெற்ற அங்கதன். இங்கே வாலி தன் மகனை அழைத்து வருமாறு சுக்கிரீவனிடம் சொல்லிய