பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு போது உன்றன் ஓங்கரு மகன்’ என்றுள்ளான். அதாவது சுக்கிரீவனின் பிள்ளைபோல் உயர்ந்த ஒற்றுமை உணர் வினால் அவ்வாறு கூறினான். இது, கோசலையின் மகனான இராமனைக் கைகேயியின் மகன் எனவும், கைகேயியின் மகனான பரதனைக் கோசலையின் மகன் எனவும் கூறியது போன்ற அன்பான உறவுப் பிணிப்பாகும். மலையும் கடலும் திங்கள் போல் ஒளி வீசுபவனும் துன்பம் என்பதையே அறியாதவனும் ஆகிய அங்கதன், தன் தந்தையை மலர்ப் படுக்கையுள்ள மலைமேல் இருக்கக் காணாது குருதிக் கடலில் கிடக்கும் நிலையில் கண்டான். "சுடருடை மதிய மென்னத் தோன்றிய தோன்றல் யாண்டும் இடருடை உள்ளத் தோரை - எண்ணினும் உணர்ந்திலாதான் மடலுடை நறுமென் சேக்கை மலையன்றி, உதிர வாரிக் கடலிடைக் கிடந்த காதல் - - தாதையைக் கண்ணில் கண்டான்' (148) தோன்றல் = அங்கதன். அவன் உலகில் துன்பம் உற்றவர் எவரையும் எண்ணிங் பார்த்ததுகூடக் கிடையா தாம் - அதாவது துன்பமே அறியாதவன்- செல்லமாக வளர்ந்தவன் என்பது கருத்து. இங்கே மலர்ப்படுக்கை மலையாகவும் குருதி வெள்ளம் கடலாகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன. - கண்ணில் கண்டான் = கண்களால் பார்த்தான். கண்களால் பார்க்காமல் வேறு எதனால் பார்ப்பது? கண் கள்ால் பார்த்தான் என்று கூறுவானேன்? பார்த்தல் பல வகைப்படும். அவை: கண்ணால் பார்த்தல், காதால்